மாவீரர் நாளன்று மாலை 6.05-க்கு படையினர் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து தமிழ் மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, தமிழ் மாணவிகளோ படையினரின் தாக்குதலுக்கு அஞ்சாமல் மாவீரர்களுக்கான விளக்கைகளை தொடர்ந்து ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ‘தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்’ என்ற ஒரு உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.
இவ்வாறு யாழ். பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவியொருவர் டிவீட்டரில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.
“26 ம் தேதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது. மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.”
“தாமுண்டு தமது படிப்புண்டு என்று இருந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்… அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..”
“நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கி விட்டிருக்கிறோம்.”
இவ்வாறு அந்த சிங்கள மாணவி தனத டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்தினை பதிவு செய்துள்ளார்.