தமிழருக்காக குரல்கொடுத்துவந்த சிங்களவரை நாடுகடத்திய சிங்கப்பூர் அரசு

brianddaaஇலங்கை அரசின் தமிழருக்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஆஸ்திரேலிய பிரஜையான கலாநிதி பிரயன் செனவிரத்னவை சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் பிரயன் என்ற சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் பேசுவதற்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லத் திட்டமிட்டிருந்தார். எனினும் அவர் சிங்கப்பூர் விமானநிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

புதிய விதிமுறைகளின் படி தனக்கு சிங்கபூரிலிரிந்து மலேசியாவுக்கு செல்ல அனுமதியில்லையென விமான நிலைய அதிகாரி கூறியதாகவும் இவ் விதிமுறைகள் குறித்து தான் அதிகாரிகளிடம் வினவியபோது  அதனை  தன்னிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லையென குறிப்பிட்டதாகவும் பிரயன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் பின்னர் சிறியதொரு அறையில், புகலிடக் கோரிக்கையாளர்களுடன் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டதுடன் உணவோ, குடிநீரோ  தனக்கு வழங்கப்படவில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்பின்னர் தன்னை விமானமொன்றில் ஏற்றி பிரிஸ்பேனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறிய பிரயன் செனவிரத்ன, இச்சம்பம் குறித்து ஆஸ்திரேலிய டிஅரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் தொடர்பில் நீண்டகாலமாக குரல்கொடுத்து வரும் பிரயன் இச்சம்பவத்துக்கு இலங்கை அரசாங்கமே காரணமெனவும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: