மட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன.
தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன.
இப்பாம்புகள் 3 அடியிலும் 4 அடியிலும் நீளமாக இருக்கின்றன. இந்தப் பாம்புகளைப் பார்க்க மக்களும் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முதல் வாரமும் இப்படி கடல் பாம்புகள் படையெடுத்ததாகக் கூறப்படும் தகவலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கடலுக்குள் அடியில் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாகவே இவ்வாறான கடல்பாம்புகள் கரையொதுங்குவதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை எனவும் இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.