உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவேக பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து புதன்கிழமையன்று (26.12.12) புறப்பட்டது.
இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் முன்னர் இருபது மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தது.
இப்போது அந்த தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடக்க முடியும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவில் நீண்ட அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளில் இந்தத் திட்டம் சிக்கியுள்ளது.
சீனாவில் இவ்வகையான அதிவேக ரயில் பாதைகள் துரிதமாக வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது.