விடுதலைப்புலி ஆதரவாளர்களை சந்திப்பதாக எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

mangala-samaraweeraஇலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிரிட்டனுக்கு பயணமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களை இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமல்வெல்த் மாநாட்டை சீர்குலைக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரனுடன் மங்கள சமரவீர இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடை நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. கடைசியாக 14-5-2012-ல் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: