ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட தயார் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிராணி பண்டாரநாயக்க ராஜபக்சே தலைமையிலான அரசினால் பழிவாங்கப்பட்டு அவருக்கும் தமது நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறைந்துபோய் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்ட பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட தாம் தயார் என்று சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏற்கனவே தாம் சிராணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடு இன்று சர்வதிகார ஆட்சிக்குள் சென்றுக்கொண்டிருக்கிறது. அனைவருமே இதிலிருந்து மீட்சிப்பெறவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இந்த நிலையில் தமது அரசியல் வாழ்க்கையில், அடியாட்கள், போதைவஸ்துகாரர்கள், தேவையில்லை. தாம் தூய்மையான அரசியல் ஒன்றையே நாடி நிற்பதாக முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.