நாடுகடந்த தமிழீழ அரசைப் பார்த்து அஞ்சும் இலங்கை அதிபர் ராஜபக்ச

Prabhakaran_with_Rudrakumaranதமிழீழம் என்ற இலட்சியத்தை அனைத்துலக அரசியல் வடிவத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டை பார்த்து இலங்கை அதிபரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே அஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ தனிநாட்டுக்காக அனைத்துலக ரீதியில் ஆதரவை திரட்ட அமரிக்காவில் இருந்து விடுதலைப் புலிகளின் உருத்ரகுமாரன் செயற்படுவது பிரச்னைக்குரிய விடயம் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கான அமரிக்கத் தூதுவராக பெற்றிசீயா பியுட்டினியஸ் பதவியேற்ற பின்னர் அவருடன் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போதே மஹிந்த ராஜபக்ச இந்த முறைப்பாட்டை தெரிவித்தாக அமரிக்க தூதரகம் வாசிங்டனுக்கு அறிவித்திருந்தது. இத்தகவல் விக்கிலீக்ஸ் இணையத்திலிருந்து கசிந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அனைத்துலகத்தில் விடுதலைப் புலிகளின் வலையமைப்பு அஞ்சும்படியாக செயற்பட்டு வருகிறது. நிதிச் சேகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அது ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. எனினும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையாளர் உருத்ரகுமாரன் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதானது விடுதலைப் புலிகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்றே கருதுவதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் இலங்கைக்கு 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்தபோதும் அவற்றில் பெரும்பாலானவை விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அமெரிக்க முன்னாள் தூதர் புட்டினஸ், இடம்பெயர்ந்தோர் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது இலங்கை- அமெரிக்க உறவை பாதிக்கும் என்று குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

TAGS: