ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தடவை ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அமெரிக்காவும் 23 நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
-BBC