தமிழீழ தலைநகரில் சுதந்திர தின நிகழ்வை கொண்டாடிய ராஜபக்சே

sl_independenceஇலங்கையின் 65-வது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு நகரான திருகோணமலையில் நேற்று திங்கட்கிழமை (04-02-2013) நடைபெற்றது.

நாட்டில் எல்லோரும் சம உரிமையோடு வாழ்வதே நல்ல தீர்வு என்று சுதந்திர தின விழா மேடையில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இனபேதம் போலவே மதபேதமும் நாட்டில் பிரிவினை உருவாக வழிவகுக்கும் என்றும் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

“இலங்கையையும் நாட்டு மக்களையும் விட்டு விலகிச் சென்ற வெளிநாட்டு புலம்பெயர் மக்களை விட உங்கள் அயல்வாசிகளை நீங்கள் நம்பவேண்டும்” என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையின்போது தமிழிலும் சில வார்த்தைகள் பேசிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 65வது சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரும் தென்படவில்லை என்று அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் திருகோணமலை நகரில் நாட்டின் பிரதான சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றுள்ளதாக இலங்கை அரசின் இணையதளம் கூறுகிறது.

திருகோணமலை நகரம் தமிழீழத்தின் தலைநகராக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் கருத்தப்பட்டது.

TAGS: