இலங்கை தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு எலிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
எனவே தொற்று நோய்கள் பரவும் ஆபத்திருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
கொழும்பு மாநகரில் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் உணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களின் மூலமே வெளிநாட்டு எலிகள் இங்கு படையெடுத்துள்ளன.
கொழும்பு துறைமுகம், அதன் களஞ்சிய சாலைகள் அதனை அண்டிய பிரதேசங்கள் மற்றும் புறக்கோட்டை, கோட்டை, பொரளை சந்தை தொகுதி பிரதேசங்களில் எலிகள் அதிகமாக காணப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ் எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சங்கள் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதனால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் பிரதீப் காரியவசம் மேலும் கூறினார்.

























