அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் வெளியீடு

post_card_noticeஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினைக் வலியுறுமாறு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற  நாடுகளது அரசுகளை கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

இக்கோரிக்கையினை வலிறுத்தும் பொருட்டு அனைத்துலக விசாரணையினை கோரும் தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்துள்ளது.

சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பாலகன் பாலசந்திரனது ஒளிப்படங்களை தாங்கியதாக வெளிவந்துள்ள இத்தாபால் அட்டையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கை – ஐ.நா உள்ளக மீளாய்வு அறிக்கை ஆகியனவற்றின் அடிப்படையில் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினையும்- இன அழிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையும் – இது தொடர்பிலான சட்ட நிலைப்பாட்டின் சாரத்தினையும் உள்ளடக்கியதாக இது வெளிவந்துள்ளது.

ஒன்றுபட்ட குரலாக அனைத்துலக விசாரணையினைக் கோருவோம் எனும் முழக்கத்துடன் இத்தபால் அட்டைகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: