மாலைதீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு தலைநகரான மாலேவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் இதன் போது பெருந்தொகையான போலிஸார் அங்கிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் அவர் கைதுசெய்யப்படவில்லையெனவும் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் தற்போதைய அதிபர் மிஹமட் வாஹீட்டின் ஊடகச் செயலாளர் மஹூட் இமாட் தெரிவித்துள்ளார்.