பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை (காமன்வெல்த் மாநாடு) இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு வேறு ஒரு நாட்டில் நடைபெறுவதனையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை நிலைமைகளை பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே கனேடிய பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடிய பிரதமருக்கு எனது பாராட்டுகள். ஒர்ரு துனிகலன முடிவு.
கனடிய பிரதமருக்கு என் நன்றி. நீங்கள் தமிழர்களுக்கு குரல் கொடுத்த
தெய்வம். வாழ்க.உங்கள் சேவை வளர்க
கனடா பிரதமர்க்கு என் மனமார்ந்த நன்றி.