இறைச்சிக்காக மிருகங்களை கொல்லக்கூடாது: தீக்குளித்த புத்த துறவி

pikku_fireகொழும்பு: மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, புத்த துறவி ஒருவர் இலங்கையில் தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இறைச்சிக்காக ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி புத்தமத அமைப்பு ஒன்று இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா என்ற இடத்தில் புத்தர் கோவில் முன்பு தீக்குளித்தார்.

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், ‘மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக’ தெரிவித்துள்ளார்.

எனினும், தீக்குளித்த புத்த பிக்கு, சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து, வீடிழந்து, நாடிழந்து வாடிய போது கண்டு கொள்ளாத புத்த துறவிகள், தற்போது ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவுமே உள்ளது.

TAGS: