புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே குழப்பத்திற்கு காரணம் -தயா மாஸ்தர்

eelam24613aஇலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறுகிறார்.

வட- மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது, தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் புனர்வாழ்வுக்காக செயற்பட முடியும் என்றும் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி  கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தில் உள்ள கடும்போக்கு தேசியவாதக் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துக்களை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அப்படியான கடும்போக்கு வாதக் கருத்துக்கள் நிலவுவதாகக் கருதவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

புலம்பெயர் தமிழர்களும் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் தனித் தமிழீழம் அமைய வேண்டுமென்று கோரி வருவதாலேயே அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களுக்கு வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

TAGS: