இலங்கைக்கு தாம் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ம் திகதியன்று பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்துரைத்துள்ளார்.
2011ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே நவநீதம்பிள்ளையின் பயணம் இடம்பெறுகிறது.
இதேவேளை நவநீதம்பிள்ளையின் பயணம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் ரவீந்திரநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.