அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையிலேயே நடந்துள்ளன.
ட்ரேவோன் மார்ட்டினின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
நியுயோர்க் நகரில் சிறிய அளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் பெரும் போராட்டமாக மாறியது.
இதனிடையே, மக்களை அமைதிகாக்குமாறு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்கா சட்டங்களின் தேசம் என்று ஒபாமா கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான சமூகப் பணியாளர் ஜோர்ஜ் ஸிம்மர்மேன் மீது சிவில் வழக்கு தொடர முடியுமா என்று ஆராய்ந்துவருவதாக அமெரிக்க நீதி விவகாரங்களுக்கான துறை கூறியுள்ளது.
தற்பாதுகாப்புக் கருதியே குறித்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஜோர் ஸிம்மர்மேன் கூறியுள்ளார். -BBC