உலகின் மிக வயது முதிர்ந்த பெண்மணி தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ளார்.
119 வயதுடைய ஜொஹன்னா மஸிபுகோ எனும் மூதாட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பேர்கில் அமைந்துள்ள சிறு கிராமத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1894 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி பிறந்ததாக மஸிபுகோவின் அடையாள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 பிள்ளைகளின் தாயாரான இவர் தற்போது 77 வயதுடைய தனது மகனுடன் வாழ்ந்து வருகின்றார்.
கின்னஸ் சாதனை புத்தக தரவுகளின் படி உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியாக ஜப்பானின் 115 வயதுடைய மிசாஓ ஒகாவா பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.