பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 60 பயிற்சியாளர்கள் குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார்.
அதன்படி ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் விசாரணை தொடர்வதால், பணிநீக்கம் செய்யப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.