அதிகம் காபி குடித்தால் ஆபத்து : ஆய்வாளர்கள் எச்சரிக்கை

coffeeவாஷிங்டன் : ஒரு நாளைக்கு, நான்கு கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் பாதிக்கப்படுவதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகில் அதிகம் பேர், காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால், உடல் சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது.

ஒரு நாளைக்கு, நான்கு கோப்பை காபி குடிக்கும் பழக்கம் உடைய, 40 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.அவர்களில், 50 சதவீதத்திற்கும் மேலானோரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அதிகம் காபி குடிப்பவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைகிறது. 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில், 2,500க்கும் மேற்பட்டோர் காபி குடிக்கும் பழக்கத்தால் உயிரிழந்து உள்ளனர். 55 வயதிற்கு உட்பட்டவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

காபி குடிக்கும் பழக்கம் உடைய இளைஞர்கள், உடல் அளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்திற்கு, 28 கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களில், 32 சதவீதம் பேர், இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதயத்தை பாதிக்கும் எந்த பொருளும், காபியில் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இவ்வாறு, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.Click Here