ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் : சிறிய அளவில் உருவான சுனாமி

ஜப்பானில் நேற்று, 6.8 ரிக்டர் புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடலில் மிகச் சிறியளவில் சுனாமியும் உருவானது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கடந்தாண்டு மார்ச் 11-ம் தேதி ஜப்பானில், 9 ரிக்டர் புள்ளி அளவிலான பயங்கர நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் பேரழிவை ஏற்படுத்தின.…

இலங்கையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டு

இலங்கை குடியரசுத் தலைவரால் பொறுப்பமர்த்தப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் "குடிமக்கள் உரிமைகள் இயக்கம்" என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக…