வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார். பியகமவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, “விளக்கமறியலில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்க மோசமான குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.…

சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ். இந்துக் கல்லூரியில் நடக்கும் அகில இலங்கை தமிழ்மொழித் தின விழாவில் பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக, யாழ். வந்த சிறிலங்கா அதிபருக்…

தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும்…

தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது. வழக்கு இல்லாதவர்களை துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்தக் கைதிகள் தொடர்பில் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை விடுவிப்பதால்…

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் முற்றாக செயலிழந்தது. வடக்கு மாகாணம் முழுவதிலும், போக்குவரத்து, வணிக மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று முழு அளவில் செயலிழந்திருந்தன.…

அமெரிக்க அதிகாரிகளை அதிரவைத்த புலிகளின் அசாத்திய கண்ணிவெடி

முகமாலையில்  அமெரிக்க&ன்ப்ச்ப்; டாஸ்  நிறுவனத்தினால் மீட்கப்பட்டு வருகின்ற, விடுதலைப்புலிகளின்  சுய தயாரிப்பு குண்டுகளை  கண்டு அமெரிக்க தூதுக்குழுவினர்&ன்ப்ச்ப்; ஆச்சரியம்  அடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம்  - கிளி நொச்சி மாவட்டங்களின் இடையில்  அமைந்துள்ள முகமாலையில் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில் அப்பகுதியில் வெடி அகற்றும் செயற்பாடுகளை  அமெரிக்க தூதரக குழுவினர்…

வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை…

வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம்…

வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு 252 கோடி ரூபாவினால் குறைப்பு

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு,…

இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம்…

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான…

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?

எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசியலமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத்…

ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்  நேற்று சிறிலங்கா வந்துள்ளார். இவரது…

வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்று காலை 09:30 மணியளவில்,…

இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி?

யாழ்ப்பாணத் தெருக்களில் இருந்து துப்பாக்கி குண்டுகளின் சத்தமும் வெடி குண்டுகளின் சத்தமும் ஓய்ந்து இன்னும் நீண்ட காலம் ஆகிவிடவில்லை. கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் வெற்றிகொண்ட 2009-ஆம் ஆண்டுதான் அந்தச் சத்தங்கள் யாவும் ஓய்ந்தன. குண்டு வெடிப்புகளும், மனிதர்கள் காணாமல் போவதும்…

ஈழத்தின் புதுகுடியிருப்பில் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புதுகுடியிருப்பு அலுவலகத்தில் இன்று பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வை கைவேலி பெண்கள் அமைப்பின் தலைவர் எம்.பி. இராயேஸ்வரி தலைமை தாங்கி நடத்தியிருந்தார். இதன்போது எழுச்சிப் போரில் உயிர் நீத்த பெண் மாவீரர்களின் நினைவாக சுடர் ஏற்றி…

மகாநாயக்கர்கள் தவறான புரிதல்களைக் களைய வேண்டும் – விக்னேஸ்வரன் செவ்வி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார். அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள…

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி – மேஜர் ஜெனரல் அமல்…

போர்க்குற்றங்கள் தொடர்பாக வன்னி களமனையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைப் பொறுப்புக்கூற வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வுகாண சிறிலங்கா இராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகம் ஒன்று விளக்கமளித்த போதே…

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15வது…

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 15வது நாளாகவும் தொடர்கின்றது. அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், இன்றையதினம் அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் அவர்கள், கலந்து கொள்ள மாட்டார்கள்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும், வவுனியாவிலும் கவனயீர்ப்பு…

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இன்று முற்பகல் 10.00 மணி முதல், யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’க்குப் பதில் ‘ஐக்கிய’ இடம்பெற வேண்டும் –…

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’  என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’  என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர்,…

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை கவலைக்கிடம்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர் கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றக்…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வேண்டும் – அனந்தி…

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா…

ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8 ஆவது கருத்தரங்கின் முடிவில், சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய குழுவினர், சிறிலங்கா சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினரைச்…

அரசியல் தீர்வைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விடமாட்டோம்: மாவை…

“அரசியல் தீர்வினைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விட மாட்டோம். அதுபோல, கொள்கைகளிலிருந்தும் விலக மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாவை சேனாதிராஜா…

துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை…

நாட்டிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்கள், துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைகள் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு ஸ்ரீலங்கா முஸ்லிம்…