காணாமல்போன சம்பவங்களுக்கு படையினரும் விடுதலைப் புலிகளுமே பொறுப்பு: ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போன சம்பவங்களுக்கு இலங்கை படையினர், விடுதலைப் புலிகள் உட்பட குறைந்தது 4 வித்தியாசமான குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்…

100 நாள் ஆட்சி வடக்கு மக்களுக்கு எதைக் கொடுத்தது? கஜேந்திரகுமார்…

நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது. அதனை ஜனாதிபதி வேட்பாளர்களின் பரப்புரை மேடைகளிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்குவாதத்தைப் பேசியதில் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைவானவராக மைத்திரிபால சிறிசேன தோன்றவில்லை. தமிழர்களுக்கு எதிராக பெரும்போரை…

மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை – அனந்தி சசிதரன்

தாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு இன்னும் புதிய அரசாங்கம் சிறந்த தீர்வுகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபகரிக்கப்பட்ட காணிகளை இராணுவம் பொதுமக்களிடம் மீள வழங்கி விட்டதாக உலகம்…

போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐ.நா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் மூலம் இடம்பெற்ற…

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் தொடர்பில் அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்காவின் கடற்பரப்பில் அத்துமீறி அவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவார்களாக இருந்தால் கட்டாயமாக கைது செய்யப்படுவார்கள் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எல்லைத்தாண்டி வருகின்ற யாராயினும் கைது செய்யுமாறு சிறிலங்காவின்…

புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை!!

கூட்டமைப்பின் தலைமை 19க்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் : வன்னி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட்டாக கோரிக்கை. புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை…

நாங்கள் கடல் எல்லையை மீறியதில்லை! எல்லை தாண்டுவதை நிறுத்த வேண்டும்!…

மீன்பிடித் தடைக்காலம் நீட்டிப்பு, மீனாகுமாரி கமிஷன் அறிக்கை, இலங்கை - தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் இழுபறி... என அடி மேல் அடி விழுந்து நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள். மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை இப்போது இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. இருதரப்பினருக்கும் சாதகமான முடிவை…

ஆர்மேனிய மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டன: வி.உருத்திரகுமாரன்

ஆர்மேனிய இன அழிப்புக்கும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்…

புலம்பெயர் தமிழ் உறவுகளும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரியும் முன்னாள்…

இந்த நாட்டில் இன்னுமொரு பொதுத் தேர்தல் வந்து அரசியலில் ஸ்திரமான தன்மை வரும் வரைக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தம் சென்ற முன்னாள் போராளிகளும் இலங்கை வருவதனை தவிர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். (22/04/2015)…

மோடிக்கு விக்கி எழுதிய கடிதம்: அதிர்ச்சியில் இந்திய அதிகாரிகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரைம்ஸ் ஒவ் இந்தியா இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில்,…

கைது செய்யப்பட்டார் பஸில் ராஜபக்ஸ

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த…

சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

சிங்களத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் தமது கருத்திலும் தமது இனத்தின் பெருமைகளையும் வரலாற்றினையும் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் முனைப்போடு செயற்படுகின்றார்கள் என்பதை வரலாற்றுக்காலம் தொட்டே பார்த்து வந்திருக்கிறோம். இப்போது இலங்கை அரசியல் ஒரு குழப்பமான சூழலில் இருக்கின்றது. யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி என்று தெரியாமல் மக்கள் குந்தியிருந்து யோசிக்கின்றார்கள். யாரை…

நாதியற்ற தமிழன்..! விழித்துக்கொள் தமிழினமே..!

உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்...! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து…

முல்லை. கொக்கிளாயில் காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்திய தமிழ் மக்கள்

இன்று முற்பகல் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில், தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் பெருந்தொகையான சிங்கள…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர பின்னிற்க வேண்டாம்: சிவாஜிலிங்கம் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை, மே மாதம் 12ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையில் உணர்வுபூர்வமாக நினைவு கூருங்கள். எத்தகைய அழுத்தங்கள். அச்சுறுத்தல்கள் வந்தாலும் பின்னிற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பி னர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய…

விவசாயக் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள்! திருகோணமலையில் தமிழர்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள்…

உடைக்கப்படும் வீடுகள் சித்திரவதைக்கூடங்களா? அதிர்ச்சியில் மீள்குடியேறிய மக்கள்!!

இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது. யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென…

இலங்கை, இந்திய ஒப்பந்தங்களின் மூலம் நாம் பலவற்றை இழந்திருக்கின்றோம்

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை, இந்தியஒப்ந்தங்களின் மூலம் தமிழர்களாகிய நாம் பலவற்றை இழந்திருக்கின்றார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து சித்திரை புத்தாண்டு விளையாட்டு நேற்று கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டு விழாவில்…

சீனாவுடனான போர்ப்பயிற்சியை இலங்கை மறைக்க முனைவது ஏன்?

கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும். சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்கி பல்வேறு நாடுகளையும் தன்பக்கம் திருப்பி வருகிறது. அது முற்றிலும் வணிக…

இரண்டானதா இலங்கை..? டெல்லியில் திடீர் குழப்பம்! வெளியாகும் சிக்கல்கள்!

இந்தியப் பிரதமர் மோடி விரைவாக உலக நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை சென்று வந்த பின்னர் டெல்லியில் பாரிய குழப்பம். எதனால்...? ஆதாரங்களுடன் விளக்குகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம். இந்திய பிரதமர் நன்கு திட்டமிட்டு உலக நாடுகளுக்கு சென்றதுடன் கனடாவில் நினைத்ததை சாதித்தார்.…

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைக்க ரணில் வியூகம்? அதிர்கின்றது வடக்கு!!

வட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:- இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர்…

இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவிற்கு திரும்பி சென்ற இலங்கை அகதிகள்

இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகதிகள் ஐவர் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை…

இலங்கையில் நடந்தது குற்றம்! தண்டனை கொடுப்பது யார்?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மேற்போந்த குற்றச்சாட்டு சாதாரணமானதன்று. உலகில் மிகப்பெரிய கொடூரமான ஆயுதம் பாலியல் வன்முறையாகும். போர் நடந்த நாடுகளில் இடம்…