இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கையில் தொடரும் நெருக்கடி – உயிரை பணயம் வைத்து ரயிலில்…
நீண்ட வார விடுமுறைக்கு பின் நேற்று (15ம் திகதி) அலுவலக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில், போதிய பேருந்துகள் இல்லாததால், ரயில்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பிரதான மார்க்கம் மற்றும் கடலோரப் பாதையில் உள்ள ரயில்களில் நெரிசல் அதிகமாக…
இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா
மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர இந்திய பிரதமர் மோடி வற்புறுத்தியதாக பெர்டினாண்டோ புகார் தெரிவித்தார். காற்றாலை மின்சார திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது…
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு! – நாடுகடந்த…
இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு -தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின்…
இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – உலக சுகாதார அமைப்பின் தலைவர்…
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையை கண்டறியவும், தற்போதுள்ள கையிருப்பு பற்றிய தரவுகளை சேகரிக்கவும் உலக சுகாதார அமைப்பு இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாசிஸ் தெரிவித்தார். அவசரகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அடுத்த…
இலங்கையில் ஆடை கொள்வனவு செய்தால் அரிசி இலவசம்
இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு நாட்டின் பிரபல ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆடை வாங்கினால் அரிசி இலவசம்…
தாம் சுதந்திரமான பிரதமர்! ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல-…
தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப 18 மாதங்களாவது செல்லும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். WION என்ற இந்திய செய்தி நிறுவனத்தின் குளோபல் லீடர்ஸ் சீரிஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரணில் விக்கிரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையை சீனா கைவிட்டு விட்டதாக கூறப்படும் கூற்றை ரணில்…
முககவசம் அணிவதிலிருந்து விலக்கு-மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) பொது மக்கள் முககவசம் அணியத் தேவையில்லை என்ற சுகாதார அதிகாரிகளின் முடிவு குறித்து தனது கவலைகளை எழுப்பியுள்ளது. ஜூன் 9 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) ஒரு அறிக்கையை வெளியிட்டார், இது ஜூன் 10, 2022 முதல்,…
இலங்கையில் ரேஷன் என்ற பங்கீட்டு முறை அறிமுகப்படுத்த ஆலோசனை!
சாத்தியமான சமமான விநியோகத்தை செயல்படுத்த, எதிர்வரும் வாரங்களில் ரேஷன் என்ற பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தலாமா என்பதை அரச அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மாத்தறை உட்பட்ட பல பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவு திட்டம் இலங்கையின்…
இலங்கையில் சிறுவர்கள் பட்டினி நிலை – 25.3 மில்லியன் டொலரை…
சிறுவர்களுக்காக நிதியுதவி இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இங்குள்ள சிறுவர்களுக்காக சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கோரியுள்ளது. எதிர்வரும் 7 மாதங்களுக்குள் இலங்கையிலுள்ள சிறார்களுக்கு அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக UNICEF என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்…
இலங்கையில் மூன்று மாத காலத்தில் 3516 ஆர்ப்பாட்டங்கள்
நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலத்தில் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் மண் எண்ணெயை கோரி 3 ஆயிரத்து 516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல்…
அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது
நாட்டில் தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் வெளிநாடுகளின் உதவிகளை பெற வேண்டுமாயின் குறிப்பிட்ட காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனத்…
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவு மக்கள் கூட்டம்
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவான மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நீண்ட வார இறுதி விடுமுறை நீண்ட வார இறுதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கும், நகர்ப்புற மக்கள் விடுமுறையைக் கழிக்கவும் தூரப் பிரதேசங்களுக்குச்…
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பின்னடைவு! பயணங்களை ரத்துச்செய்துள்ள லண்டன் நிறுவனம்!
பயணங்களை ரத்துச்செய்த விமானம் லண்டனை தளமாகக் கொண்ட முன்னணி சுற்றுலா பயண விமான நிறுவனமான TUI,இலங்கைக்கான விடுமுறை நாட்களை இந்த மாத இறுதிவரை நீடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த விமான நிறுவனம் முதலில் ஜூன் 12 வரை, இலங்கைக்கான அனைத்து…
அரசியல் நாடகத்தை நிறுத்துங்கள் – பசிலை கடுமையாக சாடிய சனத்
பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, சிரிக்கும் விஷயம் அல்ல “முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும்…
இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு!! சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம்
இலங்கை பணியாளர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியை தீர்க்கும் முகமாக சிங்கப்பூர் அரசாங்கம் இந்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும்…
போராட்டக்காரர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது!! நாடாளுமன்றில் மகிந்த
போராட்ட அமைப்பை அமைதியான போராட்டக்காரர்கள் என கருத முடியாது அவர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையின் போதே மகிந்த ராஜபக்ச இந்த…
அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன் – பதவியை…
தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பசில் வழங்கிய செய்தி இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை என இதன்போது…
மக்கள் ஆணையை இழந்துள்ள நாடாளுமன்றத்தை கலைக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க கோரிக்கை
இலங்கை நாடாளுமன்றம் தனக்கான மக்கள் ஆணையை இழந்துள்ளதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வெவ்வேறு குழுக்களாக உறுப்பினர்கள் செயற்படும் நிலையில், தன்னத்தானே அவர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு கலாசாரமாக மாறியுள்ளதாவும் அவர் சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில்…
இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவியை அறிவித்தது சீனா!
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், அந்த நாட்டுக்கு அதன் திறனுக்குள் உதவி செய்து வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாளாந்த செய்தி சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.…
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை இலங்கை விஜயம் செய்யுமாறு பிரதமர்…
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜிவாவுடன் ரணில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நெருக்கடியான தருணம் நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்றை முடிந்தளவு சீக்கிரம் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இதன்போது…
விடுதலைப்புலிகளே சிறந்த பொருளாதார திட்டத்தை பேணியவர்கள்! நாடாளுமன்றில் சிறிதரன் பகிரங்கம்
விடுதலைப் புலிகளின் சிறந்த பொருளாதார திட்டம் தான் யுத்தகாலத்தில் தமிழர்களை பாதுகாத்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் வடக்கில் வாழும் மக்களும் இந்த பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பை சந்திப்பார்கள் எனவும்…
விறகுகளை பயன்படுத்தினால் ஆயுள் கூடும் – இலங்கை மக்களிடம் ஆளும்…
எரிவாயுவிற்கு பதிலாக விறகுகளை பயன்படுத்துவதால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் , எரிவாயு போன்ற சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் சுமார் 80 வருடங்கள் எனவும்,…
நெருக்கடியில் கரம் கொடுத்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வழங்கி வரும் உதவிகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நன்றிகளை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, உணவு, எரிபொருள், உரம் மற்றும்…