பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத தற்போதைய அரசாங்கம்! விமர்சிக்கும் விமல்

தற்போதைய அரசாங்கத்தினாலும் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலை காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்க காட்டமாக விமர்சித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில்…

அமைச்சரவை ஒப்புதலுக்காக! 21வது திருத்தமும், மின்சார கட்டணத் திருத்தமும்!

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறும்போது, முக்கியமான 21வது திருத்த வரைவும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சரவையில்…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்!! புடின் பிறப்பித்த அதிரடி…

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள் ரஷ்ய அரச தலைவர் புடினின் உத்தரவுக்கு அமைய இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர். இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த ரஷ்ய விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயணிகளை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது. ரஷ்யாவின் 'ஏரோபுளோட்…

இலங்கைக்கு உதவ தயாராகும் ஐக்கிய நாடுகள் சபை!

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபை, உணவு மற்றும் மருந்துகளுக்கான முறையான சர்வதேச வேண்டுகோளை எதிர்வரும் புதன்கிழமை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச அமைப்புக்களின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பிரதமர் விக்ரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம்…

ரஷ்யாவுடன் முறுகலை தவிர்க்க கடும் முயற்சியில் இலங்கை!

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, துறைமுகங்கள்,…

அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை -பிரதமர் ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பிக்க…

நாட்டை வந்தடைந்த 28 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள்

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. 14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இருந்து பி - 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து…

இரண்டு வேளை உணவு ஒருவேளையாக கூட மாறலாம் – நெருக்கடி…

எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவையே ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரஷ்யாவும் உக்ரைனும் நடத்தும் போரினால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து…

கோட்டாபயவுக்கு பதிலாக மோடியின் படத்தை தொங்க விடுங்கள் – எதிர்க்கட்சி…

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரச தலைவர் கோட்டாபயவிற்குப் பதிலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தொங்கவிடப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியாவை தவிர வேறு புகலிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு இலங்கை இன்று,…

பேராபத்து தொடர்பில் 2020இல் எச்சரித்தேன்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இன்று நாடு வீழ்ச்சியடைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அழிவு ஏற்படும் என தான் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சுதேச மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவரை நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்…

கச்சதீவை மீளப்பெறுவதால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: சி.வி.கே.சிவஞானம்

கச்சதீவு மீளப்பெறுவதன் காரணமாக எங்களுடைய கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். அவருடைய அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு மீட்பு தொடர்பாகத் தமிழக கடற்தொழிலாளர்கள் சார்ந்த…

கொழும்பு செப்டெம்பர் மாதத்திற்குள் பஞ்சத்திற்குள்ளாகும்!! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உணவு இல்லாமல் பஞ்சம் ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். இதன் காரனாகாம கொழும்பு மாநகர சபையின் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணியை கொழும்பு மாநகர சபை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர்…

அதிரடியாக கைது செய்யப்பட்டார் துமிந்த சில்வா!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது மன்னிப்பு இடைநிறுத்தம்  பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை…

நாட்டை ஆண்ட சிங்கள தலைவர்கள் அரசியலில் தோல்வி கண்டதே வரலாறு:…

இலங்கை சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் எமது நாடு பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.ஜப்பான், மலேசியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் நிலைகளில் பொருளாதாரத்தில் காணப்பட்டன. தற்போது இலங்கை வங்காளதேசம், தமிழ் நாட்டு மாநில அரசு போன்றவற்றில் கடன், உதவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட…

இலங்கையில் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட பொருட்களின் முழு விபரம் வெளியானது

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. எனினும் இந்த பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி, சுங்க வரி மற்றும் மேலதிக கட்டணம் ஆகியவற்றை கணிசமாக உயர்த்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் 09…

மகிந்தவிடம் வாக்குமூலம்! மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

மகிந்தவின் வாக்குமூலம் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டத் தளங்கள் மீது மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அனைத்து காவல்துறையினர் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றதன் பின்னர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அழைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. முன்னதாக, இன்று மகிந்த ராஜபக்சவை…

இரண்டு வயதில் உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி!!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் - பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடுத்துள்ளார். 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி அவர் உலக சாதனைப் புத்தகத்தில்…

சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுக்கப்படவுள்ள இலங்கை கப்பல்கள்

இலங்கைக்குச் சொந்தமான கப்பல்கள் இரண்டை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வாடகைக்குக் கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess பெயர் கொண்ட இரண்டு வர்த்தகக் கப்பல்களும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காலத்தில் சர்வதேச வாடகை கப்பல் போக்குவரத்துக்கான டெண்டர் அண்மையில் கோரப்பட்டிருந்தது. விலை மனு சமர்ப்பிப்பு அதனடிப்படையில்…

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்பு! வெற்றியளித்த பேச்சுவார்த்தைஇலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்பு! வெற்றியளித்த…

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைக்கான மலேசியத் தூதுவர் டெங்யெங் தாய் உடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது மலேசியத் தொழில் வாய்ப்புக்கான பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க ஆலோசனை கொரோனா பரவல் காரணமாக…

பசிலை வெளியேற்றி நாட்டை காக்கவேண்டும்! உதயகம்மன்பில வலியுறுத்து

21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றி, நாட்டையும் நாடாளுமன்றத்தையும் பசிலிடமிருந்து காப்பாற்றுவோமென நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும் மருந்து தட்டுப்பாடுகளாலும் பட்டினியாலும் மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்தார். பசிலிடம் நாடாளுமன்ற அதிகாரம் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பார்த்து நான் எப்போதும் அச்சப்பட்டதில்லை. அவ்வாறு பயம்…

பாத்திமா ஆயிஷா கொலை:குற்றவாளிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

“சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இன்று (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டுவரும் வரை நிதியுதவி இல்லை!…

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. முன்னதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்தி உலகவங்கி 700…

நாடு எரிமலையின் உச்சியில்! பொது நிர்வாக அமைச்சக செயலாளரின் எச்சரிக்கை

தமது பிரதேசங்களிலுள்ள விவசாயிகளுக்கு விளைச்சல்மிக்க அரச காணிகளை வழங்குமாறு அரச அதிகாரிகளிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார். நாடு கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்கிறது. அத்துடன் நாடு இன்று எரிமலையின் உச்சியில் இருப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில்…