இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்: 317 கோடி…

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு…

ஆஸி. அணிக்கு நன்றி தெரிவிக்க மஞ்சள் நிற ஆடை அணிந்து…

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும்…

“இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை: 31 ஆயிரம் கோடி கடன்”…

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள்,…

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் – ரணிலுக்கு மைத்திரி சவால்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார் பெரும்பான்மை பலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.…

சிங்களவர்களே கோட்டாபயவிற்கு எதிராக போராடும் நிலை

தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளுக்குள்ளே ஒற்றுமை இல்லாததனால் ஒன்றித்து பயணம் செய்ய முடியாத ஒரு நிலை இருக்கிறதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம் தெரிவித்தார். ஓமந்தை பனிக்கர்புளியங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார். சிங்களவர்களே கோட்டாபயவை விரட்டும் நிலை இன்று நாடு…

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே: நல்லூரில் நிறைவேறியது தீர்மானம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்: ஏற்படப்போகும் நெருக்கடி

தற்போது ஏராளமான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதி இயக்குனர் வைத்தியர் சுன்துஷ் சேதாபதி தெரிவித்துள்ளார். இவர்களை அரசாங்கத்தின் தலையீட்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பினால் நாட்டுக்கு டொலர்கள் கிடைக்கும். ஆனால்…

பல்வேறு கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை பெண்ணின் துயரமான முடிவு…

புது வாழ்வு,புது உலகம் என கணவனுடன் கனடா வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் தாலி கட்டிய கணவனால் துன்புறுத்தப்பட்ட நிலையில் , பெண்களை வெறுக்கும் ஒருவரால்  பரிதாபகரமாக உயிரிழக்க அவரது பச்சிளம் பாலகன் அநாதரவாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது தான் துயரம். அவரின் துயர வாழ்வு தொடர்பில்…

தாமதிக்காமல் நாட்டை தன்னிடம் ஒப்படையுங்கள் – சஜித் கோரிக்கை

மக்களுக்கு மேலும் அசௌகரியம் ஏற்படாத வகையில் நாட்டை தன்னிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ‘நாட்டைக் காப்பாற்றும் வாரம்’ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட வாரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தன்னிடம் இருப்பதாகவும், ஐக்கிய மக்கள்…

யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவை – கட்டணங்களால்…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் அறிவிக்கப்பட்டுள்ள விமானக் கட்டணத்தை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம் - திருச்சிக்கு இடையான…

போராட்டங்களை சீர்குலைக்க குண்டர்கள் ஊடுருவல்

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் ஆளுங்கட்சியின் குண்டர்கள் ஊடுருவி அதன் நோக்கங்களை சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்றும் வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து…

24ம் திகதி முதல் 200 ரூபாவால் அதிகரிக்கும் எரிபொருள் விலை:…

எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் மோசடியில் ராஜபக்சவின் மகன் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு நெருக்கடியில்…

பொதுமக்களை தொடர்ந்தும் வருத்த வேண்டாம்! ஆட்சியாளர்களிடம் சஜித் வேண்டுகோள்

பிரச்சினைகளினால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பொதுமக்களை இனியும் வருத்த வேண்டாம் என்று சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு-07ல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, ஜனாதிபதி, பிரதமர்…

கச்சத்தீவு பொருளாதார மீட்பு வலயமாக செயற்பட வேண்டும்: சி.யமுனாநந்தா

எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இலகுவாகப் பெற இலங்கை அரசின் சட்டத்தின் கீழும் இந்திய அரசின் சட்டத்தின் கீழும் கச்சத்தீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்தினால் எமக்கு ஏற்படுகின்ற பொருளாதார அழிவில் இருந்து மீளலாம் என யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா…

மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக்களம்! பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு

கோட்டா கோ கம போராட்டக்களம் ஏராளமான பொதுமக்களின் பங்கேற்புடன் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் போராட்டக்களத்தில் பொதுமக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக ஓரிரு…

பல பிரச்சினைகளுக்கு பிரதமரால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது – வஜிர…

நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆகையினால், பதற்றமடையாமல் பொறுமையாக இருந்தால், எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு…

கோட்டாபய, ரணில் உட்பட 13 பேருக்கு எதிராக வழக்கு பதிவு:…

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர்…

“தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்” மைத்திரிபால அதிரடி அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் தீர்வுகளை வழங்க கூடிய அரசாங்கமாக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்க நான் தயார் என்றும் முன்னாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு…

கோட்டா – ரணிலுடன் இணைந்து நாம் ஆட்சி அமைக்கவேமாட்டோம்! சஜித்…

மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டில் உணவு மற்றும் குடிபானங்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் சார்ந்து தொடர்புடைய…

ஊடகவியலாளரைப் போல் செயற்படும் ரணில் – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பிரதமரே நாட்டுக்குத் தேவை, மாறாக ஊடகவியலாளர் போல் செயல்படும் பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு…

உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டு 113வது இடத்தில் இருந்த இலங்கைக்கு 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி 90 வது இடம் கிடைத்துள்ளது. குளோபல் பீஸ் இன்டெக்ஸ்( Global Peace Index) இந்த…

இலங்கையில் வேகமெடுக்கும் புதிய வைரஸ்..!! 14 உயிர்கள் பறிபோனது

இலங்கை - இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றது. கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம்…

கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு – அரைக்கம்பத்தில்…

கனடாவில் இலங்கைத் தமிழரான காவல்துறை அதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டாவா காவல்நிலையத்தில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மோட்டார் சைக்களில் விபத்தில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர்…