ஜே ஆர் பதவியேற்ற காலிமுகத்திடல் கடைசி நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாவை…

காலி முகத்திடலில்தான் இலங்கை அரசியலமைப்பின் சிற்பியான ஜே.ஆர் ஜெயவர்த்தன முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்தநிலையில் தற்போது காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டம் வெற்றி பெற்று, கோட்டா மாமா வீட்டிற்குச் சென்றால், காலிமுகத்திடல், கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை வீழ்த்திய தளமாக அமையும். எனவே ஒரு சிலரைத் தவிர, காலிமுகத்திடல்…

ஒன்பதாவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் போராட்டம் – நாடு முழுவதிலுமிருந்து…

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி…

பொருளாதார நெருக்கடி எதிரொலி – கொழும்பு பங்குச்சந்தை தற்காலிக மூடல்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்க பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் காணப்படுகிறது. இதற்கிடையே, அதிபர் மற்றும் பிரதமர் பதவி…

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள்” எலான் மஸ்கிடம்…

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிடம் டுவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கைக்கு இந்தியா மற்றும் சீனா கடனுதவி வழங்கி வரும் நிலையில்…

போராட்டகளம் சென்று பேராதரவு வழங்குங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை

அரசியலில் இருந்து அனைத்து ராஜபக்ச உறுப்பினர்களையும் பதவி விலக கோரி நடைபெறும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் சென்று பேராதரவு வழங்குங்கள் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலக கோரி இன்று 8 வது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம்…

ராஜபக்சவினர் பதவி விலகுவதை விட மாற்றுவழி கிடையாது – துஷார…

ராஜபக்சவினர் பதவி விலகுவதை விட வேறு மாற்றுவழி கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் (Thushara Indunil) தெரிவித்துள்ளார். நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ மிக மோசடி அவமதிப்புக்கு…

திங்களன்று பதவி ஏற்கிறது புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல…

மக்களின் அழுத்தங்களுக்கு அடி பணிய மாட்டோம்: எச்சரிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் எவ்வித அழுத்தங்களும் அடிப்பணியாமல் அவசியமான நபர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை நியமியத்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான தாமரை மொட்டு கட்சியின் பிரதான அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். புதுவருடம் நிறைவடைந்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவையை நியமித்து பணிகளை…

பொருளாதார நெருக்கடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்க வாய்ப்பு…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது. இதில்…

இலங்கையில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு முன்பு காலியாக உள்ள திடலில் ஒன்று கூடி உள்ள போராட்டக்காரர்கள் கைகளில் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு கோ கோத்தபய கோ என்று கோஷங்களை எழுப்பினர்.…

இலங்கை மக்கள் வீதியில்: இதுவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு…

புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய பொதுமக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்குக் கொடுத்த புத்தாண்டு பரிசாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று…

நெருக்கடியை ஒரு தேசமாக இணைந்து வெற்றி கொள்வோம் – புத்தாண்டு…

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நாம் அனைவரும் முகங்கொடுத்து வரும் துன்பங்களை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருவதாகவும் அவர்…

மக்களால் நிம்மதியாக புத்தாண்டை கொண்டாட முடியவில்லை – சஜித் பிரேமதாச

தன்னிறைவுப் பொருளாதார நாடாக இருந்த நாட்டில் இன்று மக்களால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் புத்தாண்டை கொண்டாட முடியவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது விசேட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருபுறம் பெற்றோர் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் அலைக்களிக்கப்படுவதுடன் மறுபுறத்தில் பிள்ளைகள்…

இலங்கையில் டாலர் கையிருப்பு குறைவதால் மேலும் சிக்கல்

இலங்கையில் அந்நிய செலவாணி இருப்பு குறைந்ததால் இறக்குமதி செய்வது தடைபட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசு கடனுதவி பெற்றது. டீசல், அரிசி ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இந்த…

இலங்கை அதிபர் மாளிகை அருகே 4-வது நாளாக மக்கள் முற்றுகை-…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகியவற்றால் அவதி அடைந்துள்ளனர். பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர்…

நிலைமை சீரானபின் கடனை திருப்பி செலுத்துவோம்- இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகியவற்றால் அவதி அடைந்துள்ளனர். பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர்…

நோன்பு காலங்களில் சமைப்பதற்கு கூட சமையல் எரிவாயு இல்லை :…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் சமையல் எரிவாயு பெற்றுத் தருமாறு கோரி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது. காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் சமையல் எரிவாயு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாடிக்கையாளர்கள்…

புதிய பிரதமர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் – உதய…

நாட்டின் புதிய பிரதமர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நபராக இருக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வை வழங்க முடியாத இந்த முக்கியமான…

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை அரசு 24 மணி நேரமும்…

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு தனது அரசு  24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று உறுதியளிக்கிறேன். மக்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்,…

இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்சவினருக்கு பதவிகள் கிடையாது

உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்சவினர் எவருக்கும் பதவிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது எனவும் அவர்…

நாட்டில் இராணுவ ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை ஏற்படும் அபாயம்:…

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் போது இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடிய போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இதனை…

தென்னிலங்கையில் உருவானது “கோட்டா கோ” கிராமம்!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்றைய தினம் அந்த இடத்தில் பல தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அவற்றில் ஓய்வெடுக்கும் கூடாரங்கள், மருத்துவ வசதி கூடாரம்,…

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவா நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் அரசியல் என்பன ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் இவ்வாறான…