கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வௌியிடப்படவில்லை – அரசாங்கம்

சுகாதார அமைச்சினால் எந்த சந்தர்ப்பத்திலும் போலியான தரவுகள் வௌியிடப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில தொழிநுட்ப மற்றும் கால தாமதம் காரணமாக ஏற்படும் சிறு மாற்றங்கள் தொடர்பில் சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலருடன் நேற்று (26) சுகாதார…

கொரோனாத் தடுப்பூசியே மக்களுக்கு அடைக்கலம்! – இராணுவத் தளபதி

“கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது. அந்தவகையில், கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை நூற்றுக்கு 51 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.’’ இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.…

இலங்கையர்களுக்கு அறிமுகமாகும் புதிய இலத்திரனியல் அட்டை

இலங்கையில் கொவிட் வைரஸ் எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர், இலத்திரனியல் அட்டைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு, இரண்டு தடுப்பூசிகளையும்…

இலங்கையில் சைனோபாம் தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நாடாக இருந்தாக இருந்தாலும் குறித்த நாடு வழங்கியுள்ள செயற்பாடுகளை பின்பற்றி அந்த நாட்டிற்குள் நுழைய முடியும் என சுகாதார…

வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் இலங்கையர்கள், வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இலங்கையில் வசதி வாய்ப்புள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ளவர்கள், வர்த்தகர்கள் தமது வருமானத்தில் அரைவாசியை கோவிட் - 19 நிதியத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை…

கோவிட் நோயாளர்கள் நாள் ஒன்றுக்கு பருக வேண்டிய நீரின் அளவு

கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறுகிறார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார். தொற்றாளர்களின் உடலில் இருந்து அதிகமான…

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவர்கள் Silent hypoxia எனப்படும் நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் விசேட வைத்தியர் நலின் கித்துல்வத்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ‘’கோவிட் தொற்றினால்…

நாட்டை மூடுமாறு கோரிய அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களையே மஹிந்த இவ்வாறு எச்சரித்துள்ளார். நேற்று இடம்பெற்ற…

நாடு முடக்கப்பட்டுள்ள நேரத்தில் வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் –…

நாடு முடக்கப்பட்டுள்ள நேரத்தில் வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,தொழிற்சங்கம் நாட்டை மூடும்படி கேட்டுக் கொண்ட நேரத்தில்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை குழந்தைகளுக்கு…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை உட்ப 2 குழந்தை களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. அத்துடன் கிளிநொச்சியில் 10 மாதங்களான குழந்தைக்கும், மன்னார் மாவட்டத்தில் 1 வயதும் 10 மாதமான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.…

வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்பட வேண்டாம்

வீடுகளில் உள்ள வெவ்வேறு நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வைத்தியசாலை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஹர்ச சதிஸ்சந்திர தெரிவித்துள்ளார். கொவிட் வைரஸ் அச்சம் காரணமாக சிலர் வைத்தியசாலைக்கு வருதை தவிர்த்து வருவதாக…

வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்

கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவுரை கோவை சுகாதாரதுறை அமைச்சினால் வெளியிட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால், நோய் அறிகுறிகள் அற்ற அல்லது சிறிய அளவிலான நோய் அறிகுறிகள் உள்ள நோயாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை…

நோயாளிகளின் உயிர் காக்க படையினர் இரத்த தானம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் விடுத்த வேண்டு கோளிற்கு அமைவாக சத்திர சிகிச்சை மற்றும் குறிப்பாக கொவிட் தொற்றுநோய் காரணமாக யாழ் போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் வெள்ளிக்கிழமை (20) யாழ்ப்பாண வைத்தியச்சாலை நோயாளிகளின்…

’தாமதிக்கும் கணங்கள் தலைவிதியை மாற்றும்’

டாக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசிதான் வேண்டும் என்று தெரிவு  செய்ய முயல வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, முதலில் கிடைக்கக்கூடிய முதல் தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். சில மக்களிடையே தடுப்பூசியை தேர்ந்தெடுக்கும்…

கொரோனா பரவல் எதிரொலி – இலங்கையில் 10 நாள் ஊரடங்கு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்க 10 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,800 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். 186 பேர் உயிரிழந்தனர். இதுவரை அங்கு 3…

தலிபான்களை இலங்கை அரசு ஆதரிக்க கூடாது- விக்ரமசிங்கே

ரனில் விக்ரமசிங்கே முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும். கொழும்பு: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. சீனாவை பின்பற்றி இலங்கையும் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முன்னாள்…

இலங்கையில் காணாமல் போகும் தமிழ் மொழி; அதிகரிக்கும் சீன மொழி…

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற பின்னணியில், இலங்கையின் அரசு அலுவல் மொழியான தமிழ் மொழி சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான…

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன்: ஆதிக்கம் செலுத்தவா?…

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும்…

168 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ். வடமராட்சி தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டமானாறு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 168 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை கடற்படையினர்…

கொவிட் 19 இறப்பு புள்ளி விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு…

சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெறும் வாராந்த அமைச்சரவை…

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை கடத்த முயற்சி!பொலிஸார் அதிரடி நடவடிக்கை

கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாக வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை வான் ஒன்றில் கடத்த மேற்கொண்ட முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழில் உள்ள ஒருவரிடம் ஒரு தொகைப் பணத்தை கடனாக பெற்றிருந்தார்.குறித்த பணம்…

டயர்களை வைத்து கோவிட் சடலங்களை ஒன்றாக எரிக்கத் தீர்மானம்!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறித்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நகர சபை தலைவர் நந்தன குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார். டயர்களை வைத்து விறகுகளால் சடலங்களைத் தகனம் செய்யக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது…

இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல…

இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின்…