இலங்கை: இரு அங்குல புத்தர் சிலையின் மதிப்பு 600 கோடி…

இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிலையின் பெறுமதி இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 238 கோடி ரூபாய்) என…

இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி – பின்னணி என்ன?

இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இலங்கையில் கோவிட்-19, 3ஆவது கொத்தணி மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், சீன உயர்மட்ட தூதுக்குழுவொன்று கடந்த 8ஆம்…

“கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது” – இலங்கை அரசு தகவல்

இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொலும்பு, இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவங்கொட பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா…

‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை

அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’? காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான…

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ஏன் விடுவிக்கப்பட்டார்? நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்ஷ…

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.…

நாட்டில் மேலும் 246 பேருக்கு கொரோனா

மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்ந்து  569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா…

வெங்காய விலை: இந்திய ஏற்றுமதி தடையால் பாகிஸ்தான், சீனாவை அணுகும்…

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கையில் பெருமளவில் காணப்படுவதாக வெங்காய மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வெங்காய விவசாயம் முன்னெடுக்கப்படும் வேளையில், உள்நாட்டு தேவைக்கு வெங்காய உற்பத்தி போதுமானதாக இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக உள்நாட்டு தேவைக்கான பெருமளவிலான வெங்காயம், இந்தியாவில்…

முதல் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது. 09 பெண் மூத்த பெண் பொலிஸ் பரிசோதர்களின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு  பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளதுடன், அதிலிருந்து…

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் – சர்ச்சையா சாதனையா?

இலங்கையில் ஆளும் ராஜபக்‌ஷ சகோதரர்களின் தேர்தல் வாக்குறுதியை உண்மையாக்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, அந்நாட்டின் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முதலாவது வரைவுக்கு கடந்த 2ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அரசு அறிவிக்கையில் வெளியிட்பபட்ட அந்த வரைவு திருத்தம்,…

இந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் – சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் தனுஷ்கோடி அருகே தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டார். இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெற்றதாக ராமேஸ்வரத்தில் உள்ள மாநில கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் தனுஷ்கோடி…

இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல் 79 மணி நேரம்…

இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பலில் மீட்பு பணிகளுக்கு சர்வதேச நிபுணர் குழுவினர் வந்தனர்.  பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து 2,70,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்கத்தை…

தொற்றாளர் எண்ணிக்கை 3123ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3123 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து நாட்டை வந்தடைந்த நபரொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, அவர்களில் 2925 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 186 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று…

இலங்கை நாடாளுமன்றம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி கூட்ட ஜனாதிபதி கோட்டாபய…

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் தேதி கூடவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், எதிர்வரும் 20ஆம் தேதி காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய…

யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள்…

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான். தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர். அதில்தான் பலருக்குச்…

இலங்கையில் புதிய மந்திரிசபை பதவி ஏற்பு: ராஜபக்சே குடும்பத்தில் 4…

இலங்கையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. ராஜபக்சே குடும்பத்தில் நான்கு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இலங்கையில் கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமரானார்.…

இலங்கை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஏற்றது: யார் யாருக்கு…

பதவி பிரமாணம் ஏற்கும் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கினார். கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது. முதலில் 23…

இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை நீக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்:…

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு, இந்திய அரசாங்கம் வசம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். அப்போது, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாது செய்யும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளமை…

இலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: கண்டியில் பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெறும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய அமைச்சரவையில், அமைச்சர்…

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொழும்பு: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில்  கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.  நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத்தை கலைத்து…

ராவணன்: “ஆதிகால விமானப் போக்குவரத்து” குறித்து ஆய்வு செய்ய இலங்கை…

பண்டைய கால இலங்கை மன்னனான ராவணன் தொடர்பிலான ஆய்வுகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ராவணன் தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் பத்திரிகை விளம்பரமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சினால் இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை…

‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’

அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும்…

மேலும் 15 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 15 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,121 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,782 ஆக காணப்படுகின்றது. தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்…

அஸ்தமித்துப்போன ஆர்வம்

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது,  மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய…