இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை: உயிர் அச்சுறுத்தலும் இல்லை
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை. அத்துடன் இந்த நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்று நீதிச்சேவை…
சிறந்த விமான சேவைக்கான விருதை வென்ற ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ்
ஸ்ரீலங்கன்' ஏர்லைன்ஸ் நிறுவனம் தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை வென்றுள்ளது. இந்த விருது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் வழங்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறந்த வணிக வகுப்பு விருதையும் வென்றுள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விருதுகளுக்காக வாக்களிக்கப்படுகின்றன.…
ஜனாதிபதியின் தேசிய ஒற்றுமைக்கான வேலைத்திட்டத்திற்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெகிழ்வான அணுகுமுறைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டுமென வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். 'நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை' எனும் தொனிப்பொருளில், ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) செவ்வாய்கிழமை (ஒக்டோபர்…
உலகளாவிய பொருளாதார வல்லரசுகளுடன் நட்புறவுடன் ஈடுபட இலங்கை விரும்புகிறது –…
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகப் பொருளாதார சக்திகளுடன் நட்புறவுடன் ஈடுபடுவதற்கு இலங்கையின் வலுவான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திங்கட்கிழமை அக்டோபர் 16 பெய்ஜிங்கில் நடைபெற்ற முக்கிய முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா மன்றத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தலைவர், தீவு…
அடுத்த வாரம் வெளியாகும் ஐஎம்ஃபின் இரண்டாவது தவணை தொகை
சர்வதேச நாணய நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ''மிகவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மிகக்…
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு
தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு வாட்ஸ் எப் இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 70386754 -முதன்மை…
யாழில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிரான பேரணிக்கு அழைப்பு
பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்வரும் 21.10.2023 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஒன்று கூடுமாறு ஜனநாயக முற்போக்கு சக்திகளின்…
இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழப்பு
இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார். அனுல ஜயதிலக என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதையே இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களிற்குள் அவரின் உடலை இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்.…
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை : ஜனவரி முதல்…
இலங்கை பொருளாதாரம் தற்சமயம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. சில வேளைகளில் ஜனவரி மாதம் முதல் சொத்து வரி அறவிடப்படலாம் என்ற ஐயப்பாடு உண்டு என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022ஆம் ஆண்டின்…
தமிழர்களுடைய வாக்குகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை: நாமல்
தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ராஜபக்சர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்காமை என்பது ஒரு கலாசாரம். இது தமிழ் பிராந்திய…
இந்திய பிரதமரிடமிருந்து கடிதம் வராமைக்கு சுமந்திரனே பதில் கூற வேண்டும்
இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பதனை சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எனக்கு தெரிந்தவரையில்…
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : மைத்திரிபால சிறிசேன
சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ''2015 இல் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றேன், எனினும், எனக்கு தேவையானவற்றை செய்வதற்கு வாய்ப்பு…
இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலில் கைது
இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது. -an
சுரண்டல்வாத பேராசை அரசியலை ஒழிக்க வேண்டும்
ஊழலும்,மோசடியும் தலைவிரித்தாடும் நாட்டில் இரத்தம் ஏற்றுவதற்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் கூட மருந்துகள் இல்லை என்றும், வங்குரோத்தடைந்துள்ள இந்நாட்டில் மருந்துகள் கூட திருடப்படும் அளவுக்கு ஊழல் உச்சம் ஏறும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் போலியான முறையில், போலி நிறுவனம் ஒன்றின் ஊடாக போலியான புற்றுநோய் மருந்தை…
காசாவின் நிலமை இலங்கையின் இறுதிப்போரை நினைவூட்டுகின்றது
காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றதாக பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இதனை இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், காசாவில் தற்போது இடம்பெறும்…
இந்து சமுத்திரத்தின் பங்களிப்பு முக்கியமானது: ஜனாதிபதி ரணில்
ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எமக்குரிய கலசாரம், வர்த்தகம் மற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படும்…
இலங்கையில் 9 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை
நான்கு வருடங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை…
போலி மருந்துகளை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு
போலி ஆவணங்கள் மற்றும் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றை சந்தைக்கு விடுவதை நிறுத்துமாறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்தோடு, சுகாதார…
பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது. அந்நாளின் 36 வது நினைவு தினம் நல்லூர்…
மலையக மக்களுக்கு உதவ மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை
மலையக மக்களுக்கு தன்னார்வமாக உதவிகளை செய்ய மலையக அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு தொடர்பாக வெளியான 800 திரைப்படத்தில் நடித்த இலங்கை கலைஞர்களுடனான சந்திப்பொன்று கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது,…
காஸா மோதல் இலங்கையையும் பாதிக்கலாம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே காஸா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, நாட்டின் ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்படலாம் என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் மூத்த பேராசிரியர்…
உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பானின் அன்பளிப்பு
அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்றத்தின் உப அமைச்சர்…
யாழில் தமிழ்மொழி புறக்கணிப்பு
யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (10) யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு…