இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் சுமனரத்ன தேரர்
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் முறைப்பாடு செய்துள்ளார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை…
தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக்…
மாகாணசபையை அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றி, தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறத்தாழ ஒரு முழுமையான பதவிக்காலத்தை இழந்திருக்கும் மாகாணசபைத்…
அரசாங்கத்திற்கு எதிராக போட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து சம்பள அதிகரிப்பு மற்றும் 20,000 ரூபா கொடுப்பனவைக் கோரி இந்தப்…
முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை
நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தன்னிடம் ஆட்சியைக் கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் அதிபரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை எனத்…
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்று (27) பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்று மதியம் இடம்பெற்ற ஜும்மா தொழுகையினை தொடர்ந்து போராட்டகாரர்கள் ஐந்து சந்தி வரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…
இனவாத நடவடிக்கைக்கு துணைபோகாமல் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்
இனவாத நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் எவரும் துணைபோகக்கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியில் அரசியல்வாதிகள் அனைவரும் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா' நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி…
கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்தியவர் இந்தியாவில் கைது
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்ரான் கான் (வயது39) என்ற சந்தேக நபரே இந்திய தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச்…
டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது
டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 200 மில்லியன் வழங்கும் ஜப்பான்
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு குளிரூட்டி வசதிகளுடன் கூடிய உழவு இயந்திரங்கள், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு ஐஸ் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல்…
கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது கண்ணீர்ப் புகை…
ஆசிரியர் - அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலச் சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சாணக்கியன் அலுவலகம் முன்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். இவர்கள் சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களை நம்பி இழந்துள்ளதாகவும், தற்போது நிர்க்கதிக்குள்ளான தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த…
அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு யோசனை
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு…
சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை
பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10 ஆவது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் உரையாற்றினார். ஆளுநர் செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில், இவ்வுலகாமானது அனைவரும் வாழ சிறந்த…
23 கோடி போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேஷியாவைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும்…
சட்டவிரோதமாக 61 இலங்கையர்களை கனடா கூட்டிச்சென்றவர் கைது
61 இலங்கை பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் என்ற 39 வயதுடைய நபரின் நடமாட்டத்தை சில மாதங்களாக கண்காணித்து வந்த இந்திய…
மின் கட்டண உயர்வை குறித்து அரசை சாட்டியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர்…
வரி செலுத்த வேண்டிய மக்களிடம் இருந்து உரிய முறையில் வரியை அறவிடாமல் அரசாங்கம் தொடர்ந்தும் மின் கட்டணத்தை அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் புதிய மதுபான…
லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணின்…
லெபனானில் சனிக்கிழமை அக்டோபர் 21 இடிபாடுகளில் இருந்து 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை அக்டோபர் 17 பெய்ரூட்டில் உள்ள…
பொது நிறுவன மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்படும் – நிதி அமைச்சர்
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சேமசிங்க, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது…
இலங்கையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டங்கள்
மின் கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வருடமொன்றுக்கு…
உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் ஆட தீர்மானித்தது. இதன்படி முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து…
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் 2024 இல் நடைபெறும் –…
அரசியலமைப்பின் சட்டத்தின் படி 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக்…
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்
நிலையான பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாக சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(19) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து…
பள்ளியை படிப்பை முடித்தவர்களுக்கு திறமையான பயிற்சி அளிக்க வேண்டும்
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறையில் துறையில் உள்ள தொழிலாளர் இடைவெளியைக் குறைக்க உயர்நிலைப் பள்ளிப் பட்டதாரிகளை தேவையான திறன்களுடன் சித்தப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை எடுத்துரைத்தார். ஒவ்வொரு ஆண்டும், தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 20,000 வேலை வாய்ப்புகள் உள்ளன, இருப்பினும்…