கொரோனா வைரஸ்: இலங்கையில் முதல் மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.…

கொரோனா வைரஸ்: சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடு

இலங்கையில் கடந்த 8 நாட்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் அங்காங்கே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதன்படி, இலங்கையில் இன்றைய தினமும் நால்வர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது. நாட்டில் இதுவரை 110…

அரசாங்கம் + கொரோனா = மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின்…

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் முழுமையாக முடங்கிய தமிழ் மற்றும்…

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம கிராமத்தை முடக்குவதற்குப் பாதுகாப்பு பிரிவினர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர். கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபர்…

தமிழர்கள் கொலைக்கு மரண தண்டனை பெற்ற முன்னாள் ராணுவ சார்ஜன்ட்…

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க 26 மார்ச் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று முற்பகல் அவர் வெளியேறியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன்…

இலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட மாகாண பகுதிகளின் நிலை…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இன்றைய தினம் புதிதாக நான்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது. அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 222 பேர்…

கொரோனா வைரஸ்: இலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை…

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதென அநுராதபுரம் மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவிக்கின்றார். சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதிகள் இருப்பதாக தெரிவித்து,…

இலங்கை சிறைச்சாலையில் கொரோனா பாதிப்பா? போராடிய கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு நாடு முடங்கியுள்ள நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பாரிய அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த அமைதியின்மை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கொரோனா வைரஸ்: இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 11842 பேர் – விரிவான…

இலங்கை முழுவதும் 11,842 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 72 நோயாளர்களுடன் நெருங்கிய பழகிய 11,842 பேரை தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இல்லாதொழித்தல் கோவிட் 19 வைரஸ் தொற்றை…

கொரோனா வைரஸ்: இத்தாலி, இரான், கொரியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், புத்தளம் மாவட்டத்திற்கும், கொச்சிக்கடை போலீஸ் பிரிவிற்கும் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் ஊரடங்கு சட்டம் இன்று மாலை 4.30 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண…

இலங்கையில் இயல்பு வாழ்க்கையை, புரட்டிப் போட்ட கொரோனா

இலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று (14) மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10 ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார…

கொரோனா விவகாரம்; மட்டு.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொரொனா பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை, தடுத்து வைத்து அவதானிக்கும் வகையிலும் ஆரம்ப சிகிச்சைக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அழைத்து வரப்படுவதைத் தடை செய்யக் கோரும்  கண்டனத் தீர்மானமும் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்துவதற்குமான தீர்மானமும்,…

கொரோனாவை வெற்றிகொள்ள, சுயநலமாக சிந்திக்காதீர்கள் – Dr. விஸ்னு சிவபாதத்தின்…

இந்தப் பதிவானது எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக நேற்று இதை எழுதவில்லை. ஆனாலும் இன்று மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களால் ஒரு வைத்தியராக என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை. சிறுவயதில் அம்புலன்ஸ் சத்தம் கேட்டால் அதனில் உள்ள நோயாளி விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துக்…

கொரோனா வைரஸ்: இலங்கையில் உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – Corona…

கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் (மார்ச் 13) மூன்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொரோனா வைரஸ்…

வடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள Anopheles Stephensi நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது. தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மீண்டும் வட மாகாணத்தில் இந்த நுளம்பு இனங்காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். நகரப்பகுதி, நல்லூர் மற்றும் கல்முனை…

“கொரோனா சிறப்பு மருத்துவமனை வேண்டாம்” – கொழும்பு மக்கள் போராடுவது…

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை பகுதியிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையொன்றை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமாக மாற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கு தினங்களாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வத்தளை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய்…

பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்!…

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற மிக மோசனமான பகிடிவதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்துக்குரியன. அத்துடன், இந்தச் செயற்பாடுகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.” – இவ்வாறு கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: ‘போரின்போது காணாமல் போனோர் குறித்து…

காணமால் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோட்டாபய கூறியிருந்தார். இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில்…

ரூ.600 கோடி மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல்

கொழும்பு; இலங்கை கடல் பகுதியில், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களை, இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அண்டை நாடான இலங்கையில், கடலோர பகுதியில் கடற்படையினரும், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பு துறைமுகம் அருகே, இரண்டு கப்பல்களில்…

இலங்கை அரசியல்: ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளதா? யானை சின்னம்…

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த…

இலங்கையில் ஏப்., 25ல் பொதுத்தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா மகிந்த…

கொழும்பு : இலங்கை பார்லிமென்ட் ஆயுள் காலம், இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிரடியாக கலைத்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே. ஏப்., 25ல், பொதுத் தேர்தல் நடக்கிறது. இலங்கையில், கடந்த நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடந்தது. முன்னாள் ராணுவ அமைச்சரான கோத்தபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

இலங்கை பார்லி., கலைப்பு

கொழும்பு: இலங்கை பார்லிமென்டை கலைத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேற்று இரவு திடீரென உத்தரவிட்டார்.அண்டை நாடான இலங்கைக்கு கடந்த, 2015ல் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அந்த ஆண்டு செப்., 1ல் அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும், ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய…

‘இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான பார்வை கவலை அளிக்கிறது’…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாக மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) கலந்துகொண்டு உரையாற்றிய…