இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியில் ராணுவம் – செயற்பாட்டாளர்கள்…

கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக ராணுவ…

இலங்கை ஓமந்தை விபத்து – தீக்கிரையான பேருந்து – ஐவர்…

இலங்கை வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரசுப் பேருந்து ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.…

வணிகத்தில் தமிழ்: தமது மொழிப் பற்றை வித்தியாசமாக வெளிப்படுத்தம் இலங்கை…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்த வித்தியாசமான முயற்சி பலருடைய பார்வையையும் அந்த இளைஞன் மீது திரும்ப வைத்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழ் மொழியை வளர்த்தும்,தமிழர்களின் வரலாற்று பெருமைகளை வெளிப்படுத்தியும் அதன் ஊடாக…

ஐ.நா மனித உரிமை பேரவைக்கு ஸ்ரீலங்காவின் உடனடி அறிவிப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து உடன்டியாக வெளியேறுவது தொடர்பில் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான தூதுவர்களின் தலைவருக்கு, தமது நாட்டின் தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஸ்ரீலங்காவில்…

கொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன?

தென் கொரியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கோவிட் - 19) காரணமாக அங்குள்ள பெருமளவிலான இலங்கையர்கள் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளனர். வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களில் பெருமளவிலான பணியாளர்கள் தென் கொரியாவிலேயே உள்ளனர். சுமார் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு…

அமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும்

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசிய‌ற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே,…

ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: “இலங்கை ஜனாதிபதி உரிமையை…

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரிமையை வெளிநாட்டு அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸிற்கும், வெளிவிவகார…

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இதுதான் காரணம் – பாதுகாப்பு செயலாளர்…

இரண்டு வசனங்களை மேன்மைப்படுத்துவதற்கு ஒரு வசனத்தை தாழ்மைப்படுத்தியமையே இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கம் நல்லிணக்கம்…

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்

பாடசாலை மாவணர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்கும் வேலைத்திட்டத்தை, கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை என்பன இணைந்து முன்னெடுக்க உள்ளன. அதன்படி  பாடசாலைகளை அண்மித்தாக காணப்படும் போதைப்பொருள் விற்பனைத் தளங்கள் மேல்மாகாணத்திலேயே அதிகம் காணப்படுகின்றதெனவும்,  கொழும்பிலுள்ள 49 பாடசாலைகளை இலக்காக கொண்டு…

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி…

தனிமைப்படுத்தப்பட்ட 33 பேருக்கும் விடுதலை

சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ முகாமில், தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டு 14 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்ட மாணவர்கள் 33 பேரும், ஞாயிற்றுக்கிழமை (16) விடுவிக்கப்படவுள்ளனர். அந்த மாணவர்கள், பெப்ரவரி 1ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரடப்பட்டனர். எதிர்வரும் 14ஆம் திகதியன்று 14 நாள்கள் நிறைவடைகிறதென தொற்றுநோயியல் விசேட நிபுணர், வைத்தியர் சுதத்…

512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் தொடர்பான பெயர்ப்பட்டியல் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்துக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த பெயர்ப்பட்டியலுக்கு அனுமதி வழங்கிய பின்னர்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமய வழிபாட்டு நிகழ்வுகள்

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சமய வழிபாட்டு நிகழ்வுகளும் நாளை (04) காலை இடம்பெறவுள்ளன. காலை 6.30 மணிக்கு கொழும்பு பொல்வத்த தம்மகிதாராமயவில் பௌத்த சமய வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இலங்கை ராமஞ்ஞ மஹாநிக்காயவின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரின் அனுசாசனத்துக்கு அமைய இவ் வழிபாட்டு…

கொரோனா வைரஸ்: இலங்கையின் 48 மணிநேரத்தில் கட்டப்படும் மருத்துவமனை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினால் 48 மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி முடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் வாழும் இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை வழங்கும் நோக்குடனேயே இந்த மருத்துவமனை…

கொரோனா வைரஸ்: சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஆன் மாகாணங்களில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில்…

காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்ஷ பேசியது…

காணமால் போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து, தாங்கள்…

இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில்…

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று அமைந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹுங்கம பிரதேசத்தில் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவ்வீதியில் பயணித்த…

இலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில்…

இலங்கை வரலாற்றிலேயே அதிக யானை மரணங்கள் நடந்தது 2019ல்

2019ம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 361 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகபட்ச யானைகள் இறப்பு இதுதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலான யானை மரணங்கள் மனிதர்களால் நிகழ்த்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.…

`இலங்கையின் புலனாய்வுத் தலைமை அதிகாரியாக இஸ்லாமியரா?`: சரத் பொன்சேகா ஆட்சேபம்

உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டுப் போர்க் காலத்தின் இறுதிக் காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

பதுளை - ஹப்புத்தளை பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக…

கோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை ரத்து செய்ய வேண்டுகோள்

இலங்கையின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமாயின், நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து, உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்…