ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
சன் ஏட்டின் நிருபர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த பேரணிக்கு பின்னர் சன் நாளேட்டின் நிருபர் ஒருவர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ராட்ஸி ரசாக் என்ற அந்த நிருபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அவரதுசகாவான அல்யா அல்ஹாட்ஜ்ரி கூறினார். "நான் இன்று பிற்பகல்…
துணைப் பிரதமர்: குழப்பத்துக்குப் பெர்சே பொறுப்பேற்க வேண்டும்
நேற்று சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் பெர்சே ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாத்தாரான் மெர்தேக்காவுக்குப் பதில் மெர்தேக்கா அரங்கத்தில் தங்கள் பேரணியை அவர்கள்நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தி…
பாஸ் இளைஞர் பிரிவு: போலீசாருக்கு உயர்நிலையிலிருந்து ஒப்புதல் வந்திருக்க வேண்டும்
பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் நடந்து கொண்ட "தொழில் முறைக்கு மாறான" "வன்முறையான" நடத்தைக்கு அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது. "கோலாலம்பூரைச் சுற்றிலும் நேற்று நிகழ்ந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கையாளும் போது போலீசார் காட்டிய வன்முறையையும் எடுத்த மித…
குழப்பத்தைத் “தூண்டி விட்டதாக” அஸ்மின், அன்வார் மீது பத்திரிக்கைகள் பழி…
நேற்று நிகழ்ந்த மோதல்களின் போது சேதமடைந்த போலீஸ் காரின் படங்கள் இன்றைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பெர்சே 3.0 பேரணி வன்முறையில் முடிந்ததற்கு இரண்டு முக்கிய நாளேடுகள் பிகேஆர் தலைவர்களே காரணம் எனச் சுட்டிக் காட்டின. டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு…
பெர்சே போராட்டம்: சுவாராம் போலீசாரின் நடவடிக்களைக் கண்டிக்கிறது
நேற்றிரவு மணி 9.30 வரையில் 300 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் போலீஸ் பயிற்சி மையத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர்களைச் சந்திப்பதற்கு வழக்குரைஞர்களுக்கு அனுமதி வழங்க போலீசார் மறுக்கின்றனர் என்று சுவாராம் என்ற மனித உரிமைகள் கழகம் கூறுகிறது. பேச்சு உரிமைக்கான சுதந்தரத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியும் அதற்கு…
பிகேஆர்: பெர்சே பேரணியின் போது ஊடகங்கள் தாக்கப்பட்டதற்கு நஜிப் பொறுப்பேற்க…
நேற்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட "முன்பு எப்போதும் நிகழ்ந்திராத" தாக்குதல்களுக்கும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பிகேஆர் பிரதமரைச் சாடியுள்ளது. "போலீஸ் படை திட்டமிட்டும் வேண்டுமென்றே பத்திரிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது என்பது வெள்ளிடைமலை," என அது கூறியது. "போலீஸ் தலைமைத்துவம்,…
குந்தியிருப்புப் போராட்டத்தை சாலைப் பேரணியாக மாற்றியதற்கு போலீசாரே பொறுப்பு
"பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தான் போலீசாரின் கடமை. ஆனால் சிறிதளவு தூண்டப்பட்டதும் ஆக்கிரமிப்பாளர்களாக மாறுவது அல்ல." பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளும் நீரும் பாய்ச்சப்பட்டன மக்கள் மேலாண்மை: பெர்சே 3.0ன் அடிப்படை நோக்கம் குந்தியிருப்புப் போராட்டம் ஆகும். ஆனால் அம்னோ புத்ராக்களும்…


