ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
‘டாத்தாரான் குழப்பத்துக்கு தூண்டிவிடுகின்றவர்களே காரணம்
சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட போது டாத்தாரான் மெர்தேக்காவில் ஏற்பட்ட குழப்பத்துக்கும் பீதிக்கும் தூண்டி விடும் நோக்கத்துடன் செயல்பட்ட ஏஜண்டுகளே காரணம் என சிலாங்கூர் பாஸ் மகளிர் தலைவி பாரிடா அப்துல் கூறுகிறார். வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக இப்போது மருத்துவமனையில்…
மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில்…
போலீசாரே பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் நஜிப்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது எல்லாத் தரப்புக்களிலும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் போலீசாரே அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பொதுவாக போலீசாரே பாதிக்கப்படுகின்றனர். வன்முறைகள் போலீசாரை குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன," என…
டாத்தாரான் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிக்கப்படும் என அரசாங்கம் அஞ்சியது
டாத்தாரான் மெர்தேக்காவை நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிப்பதற்கான ரகசியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால் சனிக்கிழமை பெர்சே 3.0 பேரணிக்கு அந்தப் பொதுச் சதுக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்தது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாட்டின் சுதந்தரத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக…
மலேசியத் தேர்தல் ஆணையம் பின்தங்கியுள்ளது என்கிறது உண்மை நிலை அறியும்…
மலேசியாவில் ஜனநாயகம் பலவீனமாக இருப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் பின் தங்கியிருப்பதே காரணம் என இந்த நாட்டில் தேர்தல்கள் மீது உண்மை நிலை அறிய வந்துள்ள குழு ஒன்றின் பாகிஸ்தானிய உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். நேற்று அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்ட பாகிஸ்தானிய செனட்டர் மீர்…
கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகச் சொல்லப்படுவதை பெர்சே மறுக்கிறது
சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை ஏற்பாட்டாளர்கள் இழக்கவில்லை என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க போலீஸார் முடிவு செய்த பின்னரே வன்முறை மூண்டதாக அவர் சொன்னார். "எந்தத் தரப்பும் வன்முறையில்…
நஜிப் சன் நிருபரிடம் ‘குறைந்த தொனியில்’ மன்னிப்பு கேட்டார்
சனிக்கிழமையன்று ஏழு போலீஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'குறைந்த தொனியில்' மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. "நான் நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என நஜிப் சொன்னதாக ராட்ஸி தெரிவித்தார். காயமடைந்த ராட்ஸியைக் காண்பதற்கு நேற்று…
மானியங்கள் இந்திய குத்தகையார்களுக்கு என்பதை வரவேற்கிறோம், சேவியர்
தமிழ்ப்பள்ளிகளின் நிர்மாணிப்பு, சீரமைப்பு இந்திய குத்தகையார்களுக்கே வாய்ப்புகள் எண்ணும் மஇகாவின் தேசிய தலைவர் பழனிவேலுவின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் அது அம்னே இடைத்தரகர்களிடமிருந்து விடுப்பட்டு ம.இகா இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பள்ளி நிர்வாகங்களிடம் நேரடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் இது ஒரு தேர்தல் கால அறிவிப்பாக இல்லாமல், இனி வருங்காலங்களில்…


