எச்சரிக்கையாக இருங்கள்: அவர்கள் நீங்கள் சொல்வதை அவர்கள் ஒட்டுக் கேட்கலாம்

"மாட் சாபு அந்த நிகழ்வு குறித்து மாற்று விளக்கத்தை அளித்துள்ளார். புக்கிட் கெப்போங் தாக்குதலுக்கு மலாய்க்காரர் ஒருவர் தலைமை தாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது."       பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது; திசை திருப்புவதாக பிஎன்-னைச் சாடுகிறது பார்வையாளன்: சுதந்திரத்துக்கு பங்காற்றிய அம்னோ அல்லாத…

தேசிய நாளன்று பிரதமர் எங்கே?

கடந்த புதன்கிழமை மலேசியா நோம்புப் பெருநாளையும் தேசிய தினத்தையும் கொண்டாடியபோது பிரதமர் நஜிப் இக்கொண்டாட்டங்களில் காணப்படவில்லை. ஆகஸ்ட் 30 இல் இஸ்தானா நெகாராவில்  பேரரசர் அளித்த அரச ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கடைசியாகக் காணப்பட்டார். அடுத்த நாள், அவரது தேசிய நாள் செய்தியை பேஸ்புக் மற்றும்…

ஹிண்ட்ராப்பின் இன ஒழிப்பு கூற்று “மிகைப்படுத்தப்பட்டது”

ஆளும் பிஎன் கூட்டணி இந்தியர் இன ஒழிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக்  கூறுவது  "'மிகைப்படுத்தப்பட்டது" என 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூரக குறிப்பு ஒன்று கூறியது. அதனால் ஹிண்ட்ராப்பின் சட்டப்பூர்வ போராட்டத்துக்கான "பொது மக்கள் அனுதாபம் குறையும்" என அந்தக் குறிப்பு தெரிவித்தது. அந்தக் குறிப்பை வில்கிலீக்ஸ்…

பாஸ்: கெடா “எம்பி”-யை மாற்றும் திட்டம் இல்லை

பாஸ் கட்சி , கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் நோயுற்றிருப்பதால் அவரின் இடத்தில் மற்றொருவரை நியமனம் செய்ய விரும்புகிறது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தியை   மறுக்கிறது. "தமக்குப் பதில் இன்னொருவரை அமர்த்தும் பாஸின் முயற்சியை அசிசான் எதிர்க்கிறார்" என்ற தலைப்பில் த ஸ்டாரில் வெளிவந்துள்ள செய்தியைக்…

செப்.16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருந்தனர், விக்கிலீக்ஸ்

அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த ஆவணத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் 2008, செப்டம்பர் 16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாக பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியது  உண்மைதான் என்று கூறுகிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த ஆவணம், சாபாவின் 25 எம்பிகளில் பெரும்பாலோர் பிஎன்னைவிட்டு வெளியேறத்…

பிஎஸ்எம் மீதான தேசத் துரோக புலனாய்வை போலீஸ் இன்னும் கைவிடவில்லை

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கு எதிரான தேசத் துரோகக் குற்றச்சாட்டு மீதான போலீஸ் புலனாய்வு இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது. வாக்குமூலம் கொடுப்பதற்காக பெர்லிஸில் உள்ள ஆராவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு திங்கட்கிழமை வருமாறு அந்தக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் அவசர காலச் சட்டத்தின்…

பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது

கம்யூனிஸ்ட்களை வீரர்கள் எனச் சித்தரிப்பதாகக் கூறப்படும் உரையை நிகழ்த்தியதற்காக பிஎன்-னின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவை பக்கத்தான் ராக்யாட் தற்காத்துள்ளது. மாட் சாபு என சுருக்கமாக அழைக்கப்படும் அவர் சொன்ன கருத்துக்களை அம்னோவும் பிஎன் -னும் முற்றிலும் திரித்துக் கூறுவதாகவும் அது சாடியது.…

தொகுதி ஒதுக்கீடு பற்றி பக்காத்தான் தலைவர்கள் பேச மாட்டார்கள்

பக்காத்தான் ரக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதன் தொடர்பில் அறிக்கை விடக்கூடாது என்று மாநிலத் தலைவர்களிடம் கூறப்பட்டுள்ளதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். 13வது பொதுத்தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுகளில் சில மாநிலங்கள் முடிவுகாணும் தருவாயில் உள்ளன என்றும்…

அன்வார்: தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு மாட் சாபுவை விளக்குவதற்கு அனுமதியுங்கள்

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் குறித்த தமது கருத்து மீது விளக்கமளிப்பதற்கு அனுமதிக்காமல் அவர் மீது அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்கள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னர் மாட் சாபுவின் விளக்கத்தைச் செவிமடுக்க…

“அன்வார் பயம்” அரசாங்கத்தை வாட்டுகிறது: எதிர்த்தரப்புத் தலைவர்

பிரதமருடைய ஒரே மலேசியா நோன்புப் பெருநாள் திறந்த இல்லை உபசரிப்பு பெர்மாத்தாங் பாவில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது "அன்வார் பயம் குறித்த மறைமுக அங்கீகாரம் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் அந்தத் தொகுதி மிக முக்கியமானது என பிஎன் அங்கீகரித்துள்ளதையும் அது உணர்த்துவதாக…

அன்வாரை ஜெயிலில் அடைப்பது பிஎன் பிரச்னைகளைத் தீர்க்காது

"என்ன நடந்தாலும் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார். ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பில் ஆழமான தாக்கம் ஏற்படும்."           விக்கிலீக்ஸ்: என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம் கர்மா: தான் விரும்பும் நீதித்துறை முடிவைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் எதனை வேண்டுமானாலும்…

எங்கே போகிறது மலேசியா?, லிம் கிட் சியாங்

ஆகஸ்ட் 31-இல் மெர்டேகா தினம் இவ்வளவு அமைதியாக, அண்மைய ஆண்டுகளில், கொண்டாடப்பட்டதில்லை. இதற்குக் காரணம் கடந்த சில மாதங்களில் மட்டுமல்லாமல் கடந்த சில நாள்களிலும்கூட ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் நிகழ்வுகள் இடைவிடாமல் நடந்து கொண்டிருப்பதுதான். மலேசியர்கள் நேற்று மலேசிய கொடிகளை ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனாலும் எல்லாருடைய மனத்திலும் ஒரு கேள்வி…

ஆஸ்திரேலிய, மலேசிய அகதிகள் பரிமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை

ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற Read More

வில்கிலீக்ஸ்: “என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம்”

"அன்வார் இப்ராஹிம் குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையிலாவது அம்னோ ஆட்சி தொடருவதற்கு மருட்டலாக இருப்பார் என்னும் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படலாம். இவ்வாறு வில்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ள அமெரிக்க அரசதந்திரக் கேபிள் தகவல் ஒன்று கூறுகிறது. பிரதமர் நஜிப் ரசாக்கும் அம்னோ ஆளும்…

கொலை நிகழ்ந்த இடத்தில் ரோஸ்மா இருக்க “சாத்தியமில்லை”

மங்கோலிய பெண் அல்தான்துயா கொல்லப்பட்ட இடத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இருந்தார் என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாண்டுகளுக்குமுன் அமெரிக்க அரசதந்திரி ஒருவர் வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்த இரகசிய ஆவணம் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. அந்த ஆவணம், 2006 அக்டோபரில் அந்த மங்கோலிய…

உங்கள் கருத்து: மலேசியாவுக்கு வயது 48, 54 அல்ல

"மலேசியா 1963ம் ஆண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் அதற்கு வயது 54 எனச் சொல்வது தவறு. அவ்வாறு கூறுவது மலேசியா உருவாவதற்கு சபாவும் சரவாக்கும் ஆற்றிய பங்கை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும்."      இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா நல்ல மனிதர்கள்: இது மாறுபட்ட விஷயமாக…

“சீனர்கள் ஒரங்கட்டப்படுகின்றனர்” என்ற தமது கருத்தில் ஒங் உறுதியாக நிற்கிறார்

இந்த நாட்டில் "சீன வம்சாவளியினர் ஒரங்கட்டப்படுகின்றனர்" என அமெரிக்க அரசதந்திரிகளிடம் தாம் கூறியதை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தாம் சிறுபான்மை சீன சமூக உணர்வுகளை எடுத்துரைத்தாக  அவர் சொன்னார். "ஒரங்கட்டப்படுவது குறித்து சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ…

இணக்கப் போக்கை வலுப்படுத்துமாறு பக்காத்தானுக்கு அறிவுரை

பினாங்கில் வழக்கமாக பிகேஆர் போட்டியிடும் பல மலாய்ப் பெரும்பான்மைத் தொகுதிகள் மீது டிஏபி குறி வைத்துள்ளதாகக் கூறப்படுவதை அந்தக் கட்சி மறுத்துள்ளதை பினாங்கு பிகேஆர் வரவேற்றுள்ளது. அந்தச் சர்ச்சை எழுந்திருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப் போக்கு குறைவாக இருப்பதை சரி செய்து ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு…

விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலம்

"மெர்டேக்கா" என்ற முழக்கத்துடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளில் கிள்ளான் முதல் சா ஆலம் வரை ஊர்வலமாக வந்தனர். "விடுதலை தினத்தன்று எங்களுடைய கொண்டாட்டம் இது" என்கிறார் இதில் பங்குபெற்ற தமோதிரன். நேற்று காலை பண்டமாரன் மைதானத்தில் ஆரம்பித்த இந்த ஊர்வலம்,…

இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா

மலேசியர்கள் இன்று 54வது மெர்தேகாவைக் கொண்டாடுகின்றனர். இனங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கு இடையிலும் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் வழக்கமான கோலாகலத்துடன் மலேசியர்கள் தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றனர். மலேசியா தனது பல பண்பாட்டு சமுதாயம் குறித்தும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்னணியில் சமயச் சுதந்திரம் பின்பற்றப்படுவது குறித்தும் பெருமை கொள்கிறது.…

மலேசியாவில் அம்னோபுத்ராக்களைத் தவிர மற்ற அனைவரும் ஒரங்கட்டப்படுகின்றனர்

 "மசீச, மஇகா, சபா, சரவாக்கில் உள்ள கட்சிகள் ஆகியவற்றின் சாதாரண உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது."         வில்கிலீக்ஸ்: சீனர்கள் ஒரங்கட்டப்படுவதை மசீச ஒப்புக் கொள்ள முடியாது அபாசிர்: மசீச தலைவர்கள், மஇகா, கெரக்கான் தலைவர்களைப் போன்று அம்னோவிடமிருந்து விலகவே…