புதிய எம்ஏசிசி கட்டிடத்தில் கட்டுமானக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன

மலாக்கா அலாயில் ஒராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையக் கட்டிடத்தில் கசிவுகள் ஏற்பட்டுள்ளன. கட்டுமானக் கோளாறுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   பல இடங்களில் பூசணம் ( fungus ) பிடித்துள்ளது. 23.4 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தக் கட்டிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

புதிய ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் மனைவி பேராக்கை சேர்ந்தவர்

ஆஸ்திரேலியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாப் கார்-ரின் துணைவியார் ஹெலெனா மலேசியாவில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் தைப்பிங் ஆகும். 64 வயதான அந்தத் தம்பதியினர் 1972ம் ஆண்டு பிரஞ்சு பொலினிசியாவில் உள்ள தாஹித்தி என்னும் தீவில் விடுமுறைக்காக சென்றிருந்த போது சத்தித்துக் கொண்டனர். அதற்கு அடுத்த…

நகராட்சி மன்ற உறுப்பினர்: நாங்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஆனால் தாக்கப்பட்டோம்

பச்சை நிற சட்டையை அணிந்திருந்த தாமும் 20 முன்னாள் இன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் அடங்கிய தமது குழுவினரும் பண்டார் சுங்கை லோங்-கில் புதிய பள்ளிக்கூட கட்டுமானத்துக்கான தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களாக சென்றதாக காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறுகிறார். அம்னோ…

மாஹ்புஸ்: ஹசான் அலி-க்கான அமைச்சு “ஏற்பாடு” குறித்து விசாரிக்க வேண்டும்

இளைஞர், விளையாட்டு அமைச்சு அமைத்துள்ள 30 மில்லியன் ரிங்கிட் வியூகப் பிரிவு மீது முழு கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பாஸ் இன்று கோரியுள்ளது அந்தப் பிரிவு பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி-க்காக 2,000 நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு கேட்டுக் கொண்ட பாஸ்…

என்எப்சி விசாரணை அறிக்கையைப் போலீசிடம் திருப்பிக் கொடுத்தார் ஏஜி

நேசனல் ஃபீட்லோட் விவகாரம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ள பொதுமக்கள் அதற்கு மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் போலத் தெரிகிறது. புலன்விசாரணையை முடித்து போலீஸ்  ஒப்படைத்த அவணங்களை மேலும் ஆய்வுகள் தேவை என்று கூறி சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) திருப்பி அனுப்பிவிட்டார். அவ்வழக்கில் மேலும் விசாரணை செய்யப்பட வேண்டும்…

ஐஎஸ்ஏ கைதி:மலேசியாகினி பற்றிக் கேட்டார்கள்; அம்னோவில் சேரச் சொன்னார்கள்

புரட்சி நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த படருடின் இஸ்மாயில், தாம் 2001-இல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மலேசியாகினி பற்றித் தெரியுமா என்பது உள்பட, குற்றச்சாட்டுக்குத் தொடர்பில்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டதாகக் கூறினார்.  இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த படருடின்(வலம்), ஒரு கட்டத்தில் மலேசியாகினி செய்தியாளர்களுடன்…

என்எப்சி 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனையும் முழுமையாகப் பெற்றுள்ளது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் முழுவதையும் எடுத்து விட்டதாக டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறுகிறார். "2008ம் ஆண்டு அந்த நிறுவனம் முதலில் 130 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது. 2009ம் ஆண்டுக்குள் அது…

ரம்லி அம்பலப்படுத்திய விசயங்கள் மீது நீதித் தீர்ப்பாயம் அமைக்கத் தயாரா?…

வணிகக் குற்றப் புலன்விசாரணைத் துறை முன்னாள் தலைவர் ரம்பி யூசுப், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லின் பழிவாங்கும் நடவடிக்கை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியதை அடுத்து நீதித் தீர்ப்பாயம் அமைத்து உண்மையைக் கண்டறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாரா என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட்…

சிறீலங்காவுக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் எழுப்ப அனைத்து ஹிண்ட்ராப் மாநிலத்…

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்த ஹிண்ட்ராப் ஆலோசகர் திரு. கணேசனின்  ஆலோசனைக்கு அனைத்து மாநில ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர்களும்  ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஏற்க வகை செய்யும்  நோக்கில், எதிர்கட்சிகள் தம் கட்டுபாட்டில் உள்ள நான்கு மாநிலங்களின்…

பள்ளிக்கூடக் குழப்பத்துக்கு டிஏபி-யே காரணம் என்கிறார் நோ ஒமார்

பண்டார் சுங்கை லோங்-கில் நேற்று நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் தாங்கள் தாக்கப்பட்டதாக டிஏபி உறுப்பினர்கள் கூறிக் கொள்வதற்கு விவசாய, விவசாயத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் பதில் அளித்துள்ளார். அங்கு நிகழ்ந்த குழப்பத்துக்கு டிஏபி உறுப்பினர்களே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். "டிஏபி பெரிய பொய்யர் என்பதை…

அலோர் ஸ்டாரில் நாளை பாஸ் சிறப்புக் கூட்டம்

பாஸ் மத்திய செயலவை,கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் (கீழே) குக்கும் துணை மந்திரி புசார் பஹ்ரொல்ரசி ஜவாவிக்குமிடையில் நிலவுவதாகக் கூறப்படும் கருத்துவேறுபாட்டைக் களையும் நோக்கில் நாளை அலோர் ஸ்டாரில் கூடும். கூட்டம் நடத்தும் முடிவு, நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற பாஸ் மத்திய செயலவையின் மூன்று-மணி நேர…

FGVH பங்குப் பட்டியல் சேர்க்கப்படுவது குறித்து அச்சப்படும் பெல்டா குடியேற்றக்காரர்கள்

பெல்டா செண்டாயான் குடியேற்றக்காரர் ஆர் தங்கம் குடும்பம் KPF என்ற Koperasi Permodalan Felda கூட்டுறவுக் கழகத்தில் ஒரு மில்லியன் பங்குகளை வைத்துள்ளது. அந்தப் பங்குகளில், அவரது பங்குகளும் அவர் மனைவியின் பங்குகளும் அவரது இரண்டு சகோதரர்களுடைய பங்குகளும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட பங்குகளும் அடங்கும். அந்த முழுக் குடும்பத்தையும்…

சபா ஆர்சிஐ: பிரதமர் சொன்னதுதான் சரி என்கிறார் நஸ்ரி

சபா குடியேற்றக்காரர்கள் பிரச்னை மீது அரச விசாரணை ஆணையத்தை அமைக்கும் விசயம் இன்னும் பரிசீலினையில் இருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொன்னது, சரியே என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர்…

அன்வார் “இப்லிஸைப் போன்றவர்” (‘like Iblis) என நஸ்ரி கூறுகிறார்

இஸ்ரேலியப் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டை இழுப்பதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் முயற்சிக்காக அவரை "இப்லிஸைப் போன்றவர்" என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார். 'இப்லிஸ்' என்பது புனித திருக்குர் ஆனில் பிசாசின் பெயர் ஆகும்.…

லிம் கிட் சியாங்: சுவா சொய் லெக்-கை அம்னோ தலைவராக்குங்கள்

பாஸ் கட்சி, லிம் கிட் சியாங்கை தனது தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிய கருத்துக்கு அந்த டிஏபி தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் அம்னோ தலைவருமான டாக்டர் மகாதீர் மசீச தலைவர் சுவா சொய் லெக்-கை அம்னோ தலைவராக்க வேண்டும்…

பாஸ் கட்சி அதன் நோக்கத்திலிருந்து திசை மாறி விட்டது என்கிறார்…

இஸ்லாமிய நாட்டை நிலை நிறுத்தவும் ஹுடுட் சட்டங்களுக்கு வலுவூட்டவும் தான் நடத்தும் போராட்டத்திலிருந்து பாஸ் கட்சி விலகி விட்டதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர்  டாக்டர் ஹசான் அலி கூறுகிறார். அவ்வாறு அதை திசை மாறுவதற்கு அந்தக் கட்சியில் உள்ள புல்லுருவிகளே காரணம் என்று அவர் சொன்னார். "இஸ்லாமிய…

ஆதாரத்தைக் காட்டுங்கள் அல்லது வாயை மூடிக் கொள்ளுங்கள் என MCCBCHST…

முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றுவதாகத் தாம் கூறிக் கொள்வதற்கு முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. "முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்கின்றவர்கள் மீது…

பினாங்கு CIO: சச்சரவு மீதான விசாரணை ஒரு வாரத்தில் முடியும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு எஸ்பிளேனேட்டில் லினாஸ்-எதிர்ப்புப் பேரணியில் நிகழ்ந்த சச்சரவு தொடர்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் உள்பட எண்மரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அன்று, லிம் பேசி முடித்ததும் ஏற்பட்ட சச்சரவில் காயமடைந்த இரு செய்தியாளர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக மாநிலப் போலீஸ் தலைவர் ஆயுப் யாக்கூப்…

பெர்சே 1.0: எதிர்வாதம் புரியுமாறு மாட் சாபு, தியான் சுவா…

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு என்ற முகமட் சாபு, பத்து எம்பி தியான் சுவா ஆகியோர் உட்பட 16 பேரை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்ததை மாற்றி அவர்கள் எதிர்வாதம் புரிய வேண்டும் என  ஆணையிட்டுள்ளது. அந்த 16 எம்பி-க்களில் பாடாங் செராய்…

தொழில் விரிவாக்க நோக்கில் சிங்கை சென்றதாக என்எப்சி கூறுவது அபத்தம்,…

உள்நாட்டுச் சந்தை சிறியது. அதனால் தொழிலை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்துவது அவசியம் என்று கருதி  நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் சாலே இஸ்மாயில் அளித்துள்ள விளக்கத்தில் பொருளில்லை என்கிறார் வியூக இயக்குனர் ரவிசி ரம்லி. அந்நிறுவனம்,அரசாங்கம் எதற்காக என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில்  ரிம250மில்லியன் கடன்…

அறியாமை என்று கூறி மன்னிப்பு கேட்டது த ஸ்டார்

ஆங்கில நாளேடான த ஸ்டார், உடலில் அல்லாஹ் என்று அரபுமொழியில் எழுதப்பட்டிருந்த நிலையில் அமெரிக்கப் பாடகி எரிகா பாடுவின் நிழற்படத்தைப் பிரசுரித்ததில் கெட்ட நோக்கம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.  அது,அதன் முஸ்லிம்-அல்லாத  ஆசிரியர்களின் அறியாமையால் நிகழ்ந்த பிழை. அரபு மொழியில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது…

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்;…

இலங்கை அரசின் அரக்க குணத்தை  அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக  ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும் தேடிய தமிழ் பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல  வேண்டிய தருணம் வெகு அண்மையில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய…

அரசியல் வன்முறைகளை நிறுத்துங்கள் என பெர்சே நஜிப்பிடம் சொல்கிறது

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீதும் சிவில் சமூகப் போராளிகள் மீதும் அம்னோ, பெர்க்காசாவுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் குண்டர்கள் மேற்கொள்கின்ற அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெர்சே 2.0 அமைப்பு பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக்கைக் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய அரசியல் வன்முறைகள் விதி விலக்குடன் தொடருமானால் மலேசியாவில்…