ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
ஹிஷாம்: “போலீஸ் முறைகேட்டை” நிரூபியுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்
ஊழல் புலனாய்வு ஒன்றை மறைப்பதற்கு நாட்டின் மிகவும் வலிமையான போலீஸ் அதிகாரியும் சட்டத் துறைத் தலைவரும் ரகசியக் கும்பல் தலைவர் ஒருவரும் கூட்டாகச் சதி செய்ததாகக் கூறப்படுவது மீது ஆதாரங்களைக் காட்டுமாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜோகூர் ரகசியக் கும்பல் தலைவர் கோ…
அகோங் 12 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரைத் தொடக்கி…
12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தை யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு ஹாலிம் முவாட்ஸாம் ஷா இன்று தொடக்கி வைத்தார். அந்தத் தொடக்க நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர், துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அமைச்சர்கள், அரசதந்திரிகள்…
ஏஜிக்கு எதிராக சிவராசா அவசரத் தீர்மானம் கொண்டு வருவார்
பிகேஆர் சுபாங் எம்பி ஆர்.சிவராசா,நேற்று மலேசியாகினியில் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறைத் தலைவர் கனி பட்டேய்ல் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களின் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசரத் தீர்மானம் கொண்டுவரப்போவதாகக் கூறினார். 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. விரைவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதுவே…
முதுநிலை என்எப்சி அதிகாரி மீது இன்று குற்றம் சாட்டப்படலாம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலைத் தெரிவித்த ஒரு வட்டாரம், குற்றச்சாட்டுக்களில் பெரும் பணம் சம்பந்தபட்டுள்ளதாக கூறியது. அந்த வழக்கு தற்போது கிரிமினல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு…
அனாக் தலைவர் சபாவுக்குள் நுழையத் தடை
பெல்டாவை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எதிர்த்துப் போராடும் அரசு சாரா அமைப்பான அனாக்-கின் தலைவர் மஸ்லான் அலிமான் நேற்றிரவு சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் பாஸ் மத்தியக் குழு உறுப்பினரும் ஆவார். "நான் இன்றிரவு மணி 8.45 வாக்கில் கோத்தா கினாபாலு விமான நிலையம் வந்தடைந்தேன்,…
ஷாரிஸாட் அடுத்த மாதம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்
ஷாரிஸாட் அப்துல் ஜலில் வரும் ஏப்ரல் மாதம் தமது செனட்டர் பதவிக் காலம் முடிவுக்கு வந்த பின்னர் அமைச்சராக இருக்க மாட்டார். அந்தத் தகவலை இன்று வெளியிட்ட அவர் தாம் அம்னோ மகளிர் தலைவியாகவும் பிஎன் மகளிர் தலைவியாகவும் தொடர்ந்து இருக்கப் போவதாகச் சொன்னார். மேலவையில் அவரது உறுப்பினர்…
ஐ கேர்(1Care): சுகாதார அமைச்சு விரைவில் விளக்கக் கூட்டங்களை நடத்தும்
ஐ கேர் என்ற தேசிய சுகாதார காப்புறுதித் திட்டம் மீது சுகாதார அமைச்சு விரைவில் நாடு முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறது. அந்தத் தகவலை சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் தமது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அந்த விஷயம் மீது தமது அமைச்சு அதிகாரிகளுடன் பொது…
தெங்கு அட்னான்: ஷாரிஸாட்டிடமிருந்து பதவித் துறப்புக் கடிதம் ஏதுமில்லை
அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி பதவியிலிருந்து விலகுவதாக ஷாரிஸாட் அப்துல் ஜலிலிடமிருந்து அம்னோவுக்கு பதவித் துறப்புக் கடிதம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் மறுத்துள்ளார். "இல்லை... எனக்குத் தெரிந்த வரை பதவித் துறப்புக் கடிதம் ஏதுமில்லை. நான் திங்கட்கிழமை அவருடன் பேசினேன்.…


