ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
ராயிஸ்: தகவல் சுதந்திரச் சட்டத்துக்கு அவசரமான தேவை இல்லை
மலேசியாவில் ஏற்கனவே மற்ற 'சுதந்திரங்கள்' இருப்பதால் தகவல் சுதந்திரச் சட்டத்துக்கு "அவசர அவசியமில்லை" என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "நமக்குப் பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள், தேசிய கணக்காய்வு, ஆதாரங்கள் சட்டம், தகவல் தருவோர் சட்டம், தகவல்களைப் பரப்புவதற்கான இணைய வழி முறைகள்…
பிஎன் 300 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியுடன் “மீன் பிடிக்கிறது”
மீனவர்களுடைய வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு அல்லது அவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை விநியோகம் செய்வதை விரைவுபடுத்துமாறு விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார், பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். "இது மக்களைத் தொடும் திட்டமாகும். அதனால் நாம் விரைவாக…
“நீதிபதிக்கு எதிரான அவதூறு நீதிமன்றத்தை அவமதித்தாக கருதப்படும்”
நீதித் துறை மீது அவதூறு கூறும் எந்த அறிக்கையும் கட்டுரையும் கருத்தும் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதப்பட முடியும். இவ்வாறு கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள நிறுவனத் தொடர்பு, அனைத்துலக உறவுகள் பிரிவின் தலைவர் முகமட் அய்சுடின் ஸொல்கெப்லி கூறியிருக்கிறார். அத்தகைய அறிக்கைகளை, கருத்துக்களை அல்லது கட்டுரைகளை…
லினாஸ் காரணமாக ஒய்வுத் தல மேம்பாட்டுத் திட்டம் ரத்துச் செய்யப்படலாம்
லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் குவாந்தானுக்கு அருகில் ஒய்வுத் தலம் ஒன்றையும் வீடமைப்புத் திட்டம் ஒன்றையும் மேற்கொள்ளும் திட்டத்தை நிறுத்திக் கொள்வது பற்றி அதன் மேம்பாட்டாளர் பரிசீலித்து வருகிறார். அந்தத் தொழில் கூடத்தை அமைக்கும் முடிவை அரசாங்கம் தொடர்ந்து நிலை நிறுத்துமானால்…
திருமண நிச்சயதார்த்த விருந்து: பிரதமருக்கு எதிராகப் புகார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வி திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்ததாக கூறப்படுவது மீது பிரதமருக்கு எதிராக அரசு சாரா அமைப்பான ஜிங்கா 13 இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் செய்துள்ளது. நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் பெயர்…
NFC எஜமானர் நான்கு குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை கோரினார்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன நிர்வாகத் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்களையும் 1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தை மீறிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மறுத்து விசாரணை கோரியிருக்கிறார். National Meat and Livestock Corporation என்ற நிறுவனத்துக்காக…
ட்ரியாங் தொகுதியைத் திரும்பக் கைப்பற்றுக:பிஎன் வலியுறுத்து
பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், அடுத்த தேர்தலில் பாரிசான் நேசனல் தேர்தல் இயந்திரம் கடுமையாக பாடுபட்டு டிஏபி வசமுள்ள ட்ரியாங் சட்டமன்றத் தொகுதியைத் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். “அத்தொகுதியைத் திரும்பக் கைப்பற்றுவதே நமக்கு நோக்கமாக இருத்தல் வேண்டும். பிஎன் பங்காளிக் கட்சிகள்…
ஷரிசாட் பதவி விலகுகிறார்,வான் அசிசா ஏன் விலகவில்லை?-பிஎன்
கட்சியின் நலன்கருதி பதவி விலகல் என்ற “தியாகத்தை”ச் செய்துள்ளார் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜாலில் ஆனால், பக்காத்தான் ரக்யாட் தலைவர் மட்டும் தம் கணவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது தொடர்ந்து பதவியைப் பிடித்துக்கொண்டிருந்தது ஏன் என்று பிஎன் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். “பிகேஆர் தலைவர் டாக்டர் வான்…
ஷாரிசாட் தேர்தலைவிட்டு ஒதுங்கி இருப்பது நல்லது,மசீசா இளைஞர்கள்
அடுத்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ள மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜாலில், தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என மசீச இளைஞர் பகுதி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 8-இல், அமைச்சர் பதவியைத் துறக்கும் ஷாரிசாட்டின் முடிவை மசீசா இளைஞர் பகுதி துணைத் தலைமைச் செயலாளர் லோ…
முன்னாள் ஐஜிபி:நான் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்டவன்……
போலீஸ் படை முன்னாள் தலைவர் மூசா ஹசான், ஜோகூரில் ரகசியக் கும்பல் தலைவன் ஒருவனைப் பாதுகாத்ததாகக் கூறப்படுவதையும் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுடன் சேர்ந்து வணிகக் குற்றப்புலன் விசாரணைத் துறை(சிசிஐடி) முன்னாள் தலைவர் ரம்லி யூசுப்பை ஒரு வழக்கில் சிக்க வைக்க சதிசெய்ததாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளார். குழப்பத்தை உண்டுபண்ணும்…


