ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
அவைத்தலைவர்: என்எப்சி மீது விவாதம் தேவையில்லை
மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி) விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசர தீர்மானம் ஒன்றை நிராகரித்தார்.அவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த ஜுரைடா கமருடின்(பிகேஆர்-அம்பாங்), என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிருப்பது தமக்குத்…
அவசரத் தீர்மானத்தில் ஏஜிமீது நடுவர் மன்றம் அமைக்கக் கோரிக்கை
சட்டத்துறைத் தலைவர்(ஏஜி)அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று பேரரசரிடம் பிரதமர் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அவசரத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அதைப் பதிவுசெய்த சுபாங் எம்பி…
நோ ஒமார் என்எப்சி சர்ச்சை குறித்து கருத்துரைப்பதைத் தவிர்த்தார்
நேற்றிரவு விவசாயம்,விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சுக்குச் சென்ற பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) சர்ச்சை பற்றிய விளக்கத்தைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அமைச்சர் அமைச்சர் நோ ஒமார் அந்த விவகாரத்தைத் தொடாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அக்கூட்டத்தில் நோ, பிஎன் எம்பிகளின் தொகுதிகளுக்கான அமைச்சின் நிதிப்…
எம்பி: பிரதமர் அலுவலகத்துக்குப் பில் அனுப்பப்பட்டது, தவறு நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரம்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்தது எனக் கூறிக் கொள்வதற்கான ஆதாரத்தை கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் நிராகரித்துள்ளார். பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் வழங்கியுள்ள Banquet event order (BEO) என்ற…
BR1M திட்டத்தில் பக்காத்தான் மாநிலங்கள் “அதிக நன்மை” அடைந்துள்ளன
Bantuan Rakyat 1Malaysia அல்லது BR1M உதவித் தொகை மூலம் அதிகமாக நன்மை அடைந்துள்ளது பக்காத்தான் கட்டுக்குள் உள்ள சிலாங்கூர், கிளந்தான் மாநிலங்கள் என்ற தகவலை இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்டுள்ளார். "BR1M உதவித் தொகைகளைப் பெற்றவர்களில் 13 விழுக்காட்டினர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள்... குடும்பங்கள் விழுக்காட்டில்…
ராயிஸ்: தகவல் சுதந்திரச் சட்டத்துக்கு அவசரமான தேவை இல்லை
மலேசியாவில் ஏற்கனவே மற்ற 'சுதந்திரங்கள்' இருப்பதால் தகவல் சுதந்திரச் சட்டத்துக்கு "அவசர அவசியமில்லை" என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "நமக்குப் பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள், தேசிய கணக்காய்வு, ஆதாரங்கள் சட்டம், தகவல் தருவோர் சட்டம், தகவல்களைப் பரப்புவதற்கான இணைய வழி முறைகள்…
பிஎன் 300 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியுடன் “மீன் பிடிக்கிறது”
மீனவர்களுடைய வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு அல்லது அவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை விநியோகம் செய்வதை விரைவுபடுத்துமாறு விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார், பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். "இது மக்களைத் தொடும் திட்டமாகும். அதனால் நாம் விரைவாக…


