இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
ஷாரிஸாட் தொடுத்த வழக்கில் தங்களுக்கு வாதாட பிகேஆர் இருவர் வழக்குரைஞர்களை…
பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சுராய்டா கமாருதினும் அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் தங்கள் மீது தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் தங்களைப் பிரதிநிதிப்பதற்கு நான்கு வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளனர். அந்த…
பாஸ் இளைஞர் பிரிவு: “Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் 800,000…
2010ம் ஆண்டில் Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் கீழ் திரட்டப்பட்ட, 800,000 ரிங்கிட் ஸக்காட் நிதி குறித்து கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்ற (MAIWP) ஆண்டறிக்கையில் ஏன் கணக்குக் காட்டப்படவில்லை என்பதற்குப் பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் விளக்கமளிக்க வேண்டும் என பாஸ் இளைஞர்…
“புரோட்டோனின் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஆராய ஆர்சிஐ-யை அமையுங்கள்”
தேசியக் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோனுக்கு "தவறான நிர்வாகம்" காரணமாக ரொக்கக் கையிருப்பில் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தகவல் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என…
ஷாரிஸாட்டை எம்ஏசிசி அழைத்துள்ளது
மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இன்று வேலைக்குத் திரும்பிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மாலை மணி 4.00 வாக்கில் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் எம்ஏசிசி கட்டிடத்துக்குள்…
குவான் எங்,அம்பிகா ஆகியோரை வெறுக்கத் தூண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன
தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் ஒட்டப்பட்டிருந்த (டிடிடிஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் நேற்று அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அகற்றுவதில் பக்காத்தான் கட்சிகளின் உறுப்பினர்கள், செகாம்புட் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக ஊழியர்கள்…
ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு செம்பனை எண்ணெய் விற்கின்றன
மலேசியா, பாலஸ்தீன-ஆதரவு இயக்கத்தை நடத்திவரும்வேளையில் ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு செம்பனை எண்ணெய் விற்பனை செய்வதாக இளைஞர் தரப்பு ஒன்று குறைகூறியுள்ளது. சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) தலைவர் பத்ருல் ஹிஷாம் சஹாரின், ஜோகூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள், தஞ்சோங் பெலாபாஸ் மற்றும் பாசிர் கூடாங் வழியாக இஸ்ரேலுக்கு…
பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம், EC தலைவர்
தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) ஏப்ரல் மாதம்தான் அதன் இறுதிப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் முன்வைக்கும் என்பதால் பொதுத் தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம் என்கிறார் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகம்மட் யூசுப். பெரித்தா ஹரியனில் இடம்பெற்ற செய்தியில், நாடாளுமன்றம் மே மாதம் கலைக்கப்பட்டால்,அதிலிருந்து 60…
தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிப்பில் பாஸ் மும்முரம்
13வது பொதுத் தேர்தல் “தேர்தல்களுக்கெல்லாம் பெரிய தேர்தல்” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் குறிப்பிட்டபோது பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா, பாரிசான் நேசனல் மிகப் பெரிய தோல்வியைத் தழுவப்போகும் மிகப் பெரிய தேர்தல்தான் அது என்று குத்தலாகக் கூறினார். கூறியது மட்டுமல்ல,பிஎன்னை மண்ணைக் கவ்வ வைத்து…
அம்னோவுடன் செய்து கொண்ட உடன்பாடு பற்றி சொல்லுங்கள் என ஹுசாம்,…
சிலாங்கூர் மந்திரி புசாராவதற்கு தாம் கொண்டிருந்த ஆசையை ஹசான் அலி விளக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கேட்டுக் கொண்டுள்ளார். பாஸ் கட்சிக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியதற்காக சிலாங்கூர் பாஸ் ஆணையர், மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புக்களிலிருந்து ஹசான் அண்மையில் நீக்கப்பட்டார். ஹசான்,…
கடன் திட்டம்:ஏன் இபிஎப் சந்தாதாரர்களிடம் ஆலோசனை கலக்கவில்லை?
“கடன் வாங்கியவர் கடனைச் செலுத்தாபிட்டால், ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு?நானா? என் பணம் இந்த வகையில் பயன்படுத்தப்படுவது பற்றி என்னிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை? " ராஜா நொங் சிக்கின் சவாலை பக்காத்தான் எம்பிகள் ஏற்றனர் அப்2யு: கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்…
“நஜிப் மிதவாதம் குறித்து தவறான மரத்தைப் பார்த்துக் குரைக்கிறார்”
"சீனர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தைப் பார்த்து மிதவாதமாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொள்கிறார். அவர் அதனை அம்னோ, பெர்க்காசா, பெர்க்கிடா ஆகியவற்றிடம் சொல்ல வேண்டும்." நஜிப் மிதவாதப் போக்கைப் பின்பற்றுங்கள் என சாப் கோ மே கூட்டத்தினரிடம் சொல்கிறார் அடையாளம் இல்லாதவன்_4031: சாப் கோ மே…
“கெடாவில் பிஎன்னுக்கு இந்தியர்களின் ஆதரவு 80 விழுக்காடு உயர்ந்துள்ளது”
கெடா மாநிலத்தில் பாரிசான் நேசனலின் தலைமைத்துவதற்கு இந்திய சமூகத்தின் ஆதரவு 80 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மாநில பாரிசான் தலைவர் அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா கூறினார். அந்த அளவிலான ஆதரவுடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாநிலத்தை எதிர்கட்சியிடமிருந்து பிஎன் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக…
அரசாங்கத்திற்கு எதிரான வழக்கை இண்ட்ராப் தமிழிலும் மலாயிலும் பதிவு செய்கிறது
தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியில் இண்ட்ராப் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் ஆகியோருக்கு எதிராக தொடரவிருக்கும் வழக்கு தமிழிலும் மலாயிலும் பதிவு செய்யப்படும். இதை "மிகப் புதுமையான சம்மன்ஸ்" என்று வர்ணித்த இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார், இந்த சிவில் வழக்கு…
NUBE இருவரின் வேலை நீக்கத்திற்கு எதிராக போலீஸ் புகார்
தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (என்யுபிஇ) மலாக்கா கிளை உறுப்பினர்கள் அச்சங்கத்தின் உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடினும் தலைமைப் பொருளாளர் சென் கா பாட்டும் ஜனவரி 31 ஆம் தேதி வேலை நீக்கம் செய்யப்பட்டதிற்கு எதிராக போலீஸ் புகார் செய்தனர். அப்புகாரை என்யுபிஇன் தெற்கு கிளை பொருளாளர்…
ராஜா நொங் சிக்கின் சவாலை ஏற்றனர் பக்காத்தான் எம்பிகள்
ஊழியர் சேமநிதிப் பணத்தைக் குறைந்த-விலை வீடுகளுக்கான கடனுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்துவதுமீது கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்குடன் விவாதமிட பக்காத்தான் எம்பிகள் மூவர் முன்வந்துள்ளனர். பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் (படத்தில் வலம் இருப்பவர்), டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுச் செயலாளர்…
MACC விசாரணை இறுதிக் கட்டத்தில், ஷாரிஸாட் விசாரிக்கப்படலாம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீதான தனது விசாரணை அறிக்கைகளை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் விரைவில் சமர்பிக்கும். எம்ஏசிசி விசாரணைகள் 'இறுதிக் கட்டத்தில்' இருப்பதாக அதன் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் முஸ்தாபார் அலி…
நமக்கு நம்பிக்கை வேண்டும் என நஜிப் இந்தியர்களிடம் கூறுகிறார்
இந்தியர்கள் இன்னும் அதிகமாகப் பெற விரும்பினால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். "இந்தியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலும் அரசு சாரா இந்திய அமைப்புக்களுக்கு அரசாங்கத்துக்கும் இடையிலும் பங்காளித்துவம் (partnership) தேவை," என பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி கூடிய ஆயிரக்கணக்கான…
காதலர் தினத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துமாறு அரசாங்கத்துக்கு பாஸ் இளைஞர்…
காதலர் தினத்துக்கு எதிரான இயக்கத்தை தொடங்குமாறு முஸ்லிம் இளைஞர் அமைப்பு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த காதலர் தினம் ஒழுக்கக் குறைவான நடவடிக்கைகளை மேம்படுத்துவதாக அது கூறிக் கொண்டது. பிப்ரவரி 14ம் தேதி அந்த தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடாமல் தடுப்பதற்கு காதலர் தின எதிர்ப்பு விளம்பரங்களை அரசாங்கம்…
மிதவாதத்தைக் கடைப்பிடியுங்கள் என பிரதமர் சாப் கோ மே விழாவில்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது மிதவாதச் செய்தியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த முறை அதனை அவர் சிலாங்கூர் ஜெஞ்சாரோம்-ல் சாப் கோ மே கொண்டாட்டங்களின் போது கூடியிருந்த 50,000 பேர்களிடம் கூறினார். "நாம் சமய ரீதியாக மாறுபட்டிருந்தாலும் எல்லா சமயங்களிம் மிதவாதம் காணப்படுகிறது. நம்மிடையே தீவிரவாதம்,…
பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஜோகூரில் களம்…
வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் ஜோகூரில் போட்டியிடுவார் என்ற வதந்திகளை அந்த மாநில பாஸ் கட்சி ஆனனயரும் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் உறுதி செய்துள்ளனர். அது குறித்து விவாதம் நடந்துள்ளதை உறுதி செய்த முஸ்தாபா இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.…
தேடப்படும் நபர் பத்தாமில் பிடிபட்டார்
பிகேஆரின் மூத்த அரசியல்வாதி ஒருவரின் அந்தரங்கச் செயல்களைக் காண்பிக்கும் புகைப்படங்கள் விநியோகம் செய்யப்பட்டதன் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காக தேடப்பட்டுவரும் நபரை இந்தோனேசிய அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்தோனேசியாவின் பத்தாம் செண்ட்ரலில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக மலாய்மொழி ஏடான கோஸ்மோ! (Kosmo!) அறிவித்துள்ளது. ஆனால், அப்போலீஸ்…
“50 ஆண்டு கால ‘நம்பிக்கை’ போதாதா?”
"நஜிப் அவர்களே நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் எம்ஆர்எஸ்எம் என்ற மாரா கீழ் நிலை அறிவியல் கல்லூரிகளை தோட்டங்களைச் சேர்ந்த ஏழை இந்தியர்களுக்கும் புதுக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை சீனர்களுக்கும் திறந்து விடுங்கள்." இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் நஜிப் ஜனநாயகவாதி53: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் மலேசிய…
பேராக் ‘வீழ்ச்சியின்’ மூன்றாம் ஆண்டு நிறைவை பக்கத்தான் துக்கத்துடன் அனுசரித்தது
பேராக் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் இறுதி நாளை தங்களது பேராக் மாநில அரசாங்கம் வீழ்த்தப்பட்டதின் மூன்றாம் ஆண்டு நிறைவை 'துக்கத்துடன்' அனுசரித்தனர். ஈப்போ மேடான் இஸ்தானாவில் உள்ள மரம் ஒன்றின் கீழ் அவர்கள் இன்று சிறிது நேரம் ஒன்று கூடினர். பக்காத்தானில் உள்ள மூன்று…


