உயிர்த்தியாகம் செய்த அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. தலைமையகத்தில் நினைவிடம்

உயிர்தியாகம் செய்த அமைதிப்படை வீர்களுக்கு ஐ.நா தலைமையகத்தில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரி இந்தியா கொண்டு வந்த தீர்மானம் சுமார் 190 நாடுகளின் ஒப்புதலுடன் ஏற்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஐநா சார்பில் அமைதிப் படை செயல்பட்டு வருகிறது. இதில்,…

சீன எல்லை அருகே ரூ.21,413 கோடியில் மெகா நீர்மின் திட்டம்

சீன எல்லையில் என்எச்பிசி சார்பில் கட்டப்பட்டு வரும் சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூலையில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து நிதி இயக்குநர் ராஜேந்திர பிரசாத் கோயல் கூறுகையில், “சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் முதல் பிரிவு டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 இறுதிக்குள் அதன் 8…

பெண்கள் இலவச பயண திட்டத்தால் ஒரே நாளில் ரூ.8.84 கோடி…

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்த வகையில் ஒரே நாளில் ரூ.8.84 கோடி செலவாகி உள்ளது. இந்த திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.3,400 கோடி அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என கூறப்படுகிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் கர்நாடகத்தில் முதல்-மந்திாி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- அகில இந்திய அளவில் தமிழக…

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும்…

இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு…

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது

மத்திய, மாநில அரசுத்துறைகளில் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார். ரோஜ்கர் மேளா' என்ற மெகா வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அளிக்கும்பொருட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பணிக்கான ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில்…

கடைசி இந்திய பத்திரிகையாளரும் வெளியேற சீனா உத்தரவு

சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில் மூவரின் விசா காலாவதியானதை அடுத்து, அவர்களது விசாவை புதுப்பிக்க சீன அரசு மறுத்துவிட்டது.…

விமர்சனத்தை சகித்து கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர்

விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளில் மத்திய பாஜக அரசைப் பற்றி விமர்சிக்கிறாரே தவிர, தரக்குறைவாக பேசவில்லை. விமர்சனம் செய்வதைக்கூட பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள…

இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின. நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில்…

பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.2,500…

பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில்…

2022-ல் சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்

கடந்த ஆண்டு சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் MyGovIndia வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் 8.95 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்னையில் முன்னணியில் இருக்கும் முதல் 5…

சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது

சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் கடற்கரை நகரான போர்பந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களின் செயல்பாடு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை போர்பந்தர் மற்றும் அதன்…

சாட்ஜிபிடி அறிமுகமான போதே அதை பயன்படுத்திய இந்திய விவசாயி

ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும், அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்துள்ளார். அவரது உலக பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அவரது வருகை அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று இந்தியா வந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசி இருந்தார். இந்நிலையில்,…

இந்தியாவில் நடைபெறும் 71-வது “மிஸ் வேர்ல்ட்” உலக அழகிப் போட்டி

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், உலக அழகிப் போட்டி…

தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணைய சேவையில் களமிறங்கிய கேரள அரசு

நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு 'கே.எப்.ஓ.என்' எனப்படும் இணைய சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மலிவான விலையில் இன்டர்நெட் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கி வருகிறது.…

இந்திரா காந்தி படுகொலையை சித்தரித்து கனடாவில் கொண்டாட்ட ஊர்வலம்

கனடாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் நடந்த ஊர்வலக் காட்சி வெட்கக்கேடானது என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, கனடா தூதரக அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கண்டனத்தை எடுத்துரைக்க வேண்டும்…

சமூக வலைதளத்தில் திப்பு சுல்தான் படம் அவமதிப்பு – மகாராஷ்டிராவில்…

சமூக வலைதளத்தில் திப்பு சுல்தான்படத்தை அவமதிக்கும் வகையில் ஆடியோவுடன் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் வெளியாகின. இதுதொடர்பாக அம்மாநிலத்தின் கோல்ஹாபூரில் நேற்று இரு பிரிவினரிடையே மோதல் நடைபெற்றது. அப்போது, போராட்டக் காரர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதுகுறித்து கோல்ஹாபூர் காவல்துறை…

அமித் ஷா வீட்டின் முன்பாக குகி இனத்தவர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குகி இனத்தைச் சேர்ந்த மக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம், 2 இனக்குழுக்கள் இடையேஏற்பட்ட மோதல், வன்முறையில் பொதுமக்கள் பலர்…

வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலம் செல்வதை தடுக்க குழு – மம்தா…

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளி மாநிலம் செல்வதை தடுப்பதற்காக அம்மாநில அரசு ஒரு குழு அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் டெல்லி, மும்பை, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணியாற்றி வருகின்றனர். சமீப ஆண்டுகளாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் முயற்சியில்…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மெய்த்தி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்தை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இதற்கு…

சர்ச்சில், மண்டேலாவுக்கு கிடைத்த கவுரவம் போல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற…

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை. இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க…

சிறுநீரகவியல் புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் அறுவைசிகிச்சை சிறந்தது

துரைப்பாக்கத்தில் உள்ள சென்னையூரோலஜி அண்டு ரோபோடிக்ஸ் இன்ஸ்டிடியூட் (க்யூரி) மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்டரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதை முன்னிட்டு நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன இயக்குநர் அகிலாசீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவமனை தலைவர் பி.பி.சிவராமன்தலைமை வகித்தார்.…

இன்று உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்: நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை…

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட துணை சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் ஜூன் 5-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தின் இந்த…