மத்திய, மாநில அரசுத்துறைகளில் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.
ரோஜ்கர் மேளா’ என்ற மெகா வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அளிக்கும்பொருட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பணிக்கான ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இன்று காலை 10.30 மணி அளவில் காணொலி நிகழ்ச்சி மூலமாக 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
‘இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில், அரசுப்பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியில் இருப்பார்கள்’ அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை கொண்டுள்ளோம்.
இன்று தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். ரோஜ்கர் மேளாவில் இதுவரை 3,58,000 பணி நியமன ஆணைகள் வழங்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-dt