மருத்துவ உதவிகள் கேட்டு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம்

இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, பிரதமர்…

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் தமிழக வீரர் கமலேஷ் வீரமரணம்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சேலம் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று (ஏப்.12) அதிகாலை 4.30 மணியளவில்…

மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார் – அமித்ஷா

அருணாசலபிரதேசம் சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு திப்ருகரில், பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக இருந்தன. ஆனால், சமீபத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றபோதிலும், 3…

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மீறுபவர்களுக்கு சிறைத்…

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி விளையாடினால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், நீதிமன்றம் சென்றதால், சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், புதிய சட்டம்…

என்னை சிறையில் அடைத்தாலும் மக்களுக்காக உழைப்பேன் – ராகுல் காந்தி

எம்.பி. பதவி தகுதி இழப்புக்கு பின்னர் முதல்முறையாக கேரள மாநிலம் வயநாட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், ‘‘என்னை சிறையில் அடைத்தாலும், மக்களுக்காக உழைப்பேன்’’ என்று ஆவேசத்துடன் கூறினார். கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது…

அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட்; ராகுல் காந்தி மீது அவதூறு…

அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட் செய்ததற்கு எதராக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார். அசாமில் கவுகாத்தி நகரில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி அசாமுக்கு…

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்களை…

உலக மகிழ்ச்சி குறியீடு பிழையானது, இந்தியாவின் தரவரிசை 126 அல்ல:…

உலகின் மகிழ்ச்சி குறியீடு பிழையானது. இந்தியாவின் தரவரிசை 126 அல்ல, 48 ஆக இருந்திருக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி துறையால் வெளியிடப்படும் அறிக்கையில் (எஸ்பிஐ எகோராப்) கூறப்பட்டுள்ளது. உலகின் மகிழ்சியான நாடுகள் பட்டியலை கடந்த 10 ஆண்டுகளாக ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சிக்கான…

சிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர்…

சிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியான தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் பொருட்களை வாங்குவதற்காக சென்றிருந்தார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு படிக்கட்டு…

இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளம், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அணுமின்…

இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த ரேடார் தளத்தின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை, சீனாவுக்கு நட்பு நாடாக…

தமிழ்நாட்டில் நகரங்கள் இடையே விரைவில் ஹெலிகாப்டர் சேவை

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ இதற்கான பரிந்துரையை உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் இடையே பயணம் செய்ய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. மாநிலம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்…

டார்க்நெட், கிரிப்டோகரன்சியை பயன்படுத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டார்க்நெட் இணையம் மற்றும் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்சிபி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. சர்வதேச போதைப்பொருள்…

புதுச்சேரி பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: "புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக கரோனா பரவல் இல்லை. கடந்த சில வாரங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கரோனா…

ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தல்: இந்தியா வெற்றி

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஐ.நா. புள்ளியியல் கமிஷனின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்க உள்ளது. ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி பெற்றது. இதன்படி இந்தியா 46 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும் ,…

முதல்வரின் திறனறி தேர்வு திட்டம் தொடக்கம்; அனைவரும் படிக்கும் சிறந்த…

சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பி.எஸ். தரவுப் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்பில் சேர, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில், 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.…

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. ஒட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகல்

ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிமுறைகள் மீறப்படுவதாகவும் உக்ரைன் போருக்கான சர்வதேச ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. உக்ரைனிலிருந்து…

இந்தியாவில் 4000-ஐ கடந்தது தினசரி கோவிட் தொற்று

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 163 நாட்களுக்கு (கடந்தாண்டு செப்.25க்கு பின்னர்) பிறகு கோவிட் பாதிப்பு…

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் – இந்திய…

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதாக இந்திய மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள 'லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த கரண் கட்டாரியா (வயது 22) முதுகலை சட்டப் பட்டப்படிப்பு படித்து…

சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 23 பேர்…

சிக்கிம் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலம் நாது லாகணவாய். சீன எல்லை அருகே உள்ள இந்த இடம் தரைமட்டத்தில் இருந்து 14,140 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அழகான இயற்கை காட்சிகளை காணலாம். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா சீசனில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.…

அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா; இந்தியா…

அருணாசல பிரதேச மாநிலம் ஆனது தெற்கு திபெத் என கூறி 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது.…

காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு எதிர்ப்பை உறுதி செய்ய…

காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தித் தராது என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி…

உலக புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும்…

புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில், ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி 76 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். உலகளவில் அரசியல் நகர்வுகள், தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், நிர்வாகத் திறன் போன்றவற்றை ஆய்வு செய்து வரும் மார்னிங் கன்சல்ட் ஆய்வு…

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்

ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு இப்போதே தொடங்கியுள்ளது. இதன்படி பாஜகவின் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் ஃபைல்ஸ் முதல் பாகம்’’ என்ற தலைப்பில் நேற்று வீடியோ வெளியிடப்பட்டது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த…