சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்

சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கின் மேல் முறையீட்டில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் போஸ்னிய குரேஷியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் பிரல்ஜக் (72) விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். முன்னாள் சோஷியலிஸ்ட் குடியரசான யுகோஸ்லாவியாவில் இருந்து போஸ்னியா-ஹெர்சகோவினா தனிநாடாகப் பிரிந்து செல்லத் தீர்மானித்ததை அடுத்து…

‘போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்’: அமெரிக்கா…

அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை கேட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க…

வடகொரியாவின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்..

ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை…

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான்: பென்டகன் அறிவிப்பு..

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான் என பென்டகன் செய்தி தொடர்பாளர் கலோனல் ராபர்ட் மேனிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது.…

நைஜீரியா: அருங்காட்சியகம் ஆகும் தீவிரவாத தலைவரின் வீடு

நைஜீரியாவில் உள்ள இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான போகோ ஹாராம்-இன் நிறுவனரின் வீடு அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளது. இது அந்தப் பகுதியில் சுற்றலாவை மேம்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அந்தக் குழுவின் தளமாக விளங்கிய சம்பிஸ்டா வனப் பகுதியையும் போர்னோ மாநில அரசு சுற்றலாத் தலமாக மாற்ற பரிசீலித்து வருகிறது. ஆனால்,…

முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்கக்கூடிய புதிய ஏவுகணையை ஏவியது வட…

முழு அமெரிக்கா கண்டத்தையும் அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி கூறுகிறது. மிகவும் சக்தி…

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா

வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை அமெரிக்க அரச வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய…

சூ கீ-இன் விருதை, ஆக்ஸ்போர்டு மீட்டுக்கொண்டது

இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு நகரசபை, மியன்மார் ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய ‘நகரத்தின் சுதந்திரம்’ (ஃப்ரிடம் ஓஃப் சிட்டி) விருதை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தது. மியான்மார் இராணுவத் தலைவர், அந்நாட்டில் மத பாகுபாடு ஏதும் இல்லை என்று கூறிய அதே நாளில், வாக்கெடுப்பு நடந்ததாக ‘தி கார்டியன்’ செய்தி…

பாகிஸ்தான்: கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை கலைக்க ராணுவ நடவடிக்கை இல்லை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நெடுஞ்சாலையை முடக்கிப் போராடிவரும் கடும்போக்கு இஸ்லாமியர்களை ஒடுக்க, படைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முடிவு செய்துள்ளது. சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களை கலைப்பதில் போலீஸ் தோல்வியடைந்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்தது. இப்பிரச்சனையைத் தீர்த்துவைக்க கடும்போக்கு இஸ்லாமிய தலைவர்களுடன்…

எகிப்தில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு ஆயுதக்கிடங்குகள் அழிப்பு

கெய்ரோ, எகிப்தில் மசூதி தாக்குதலுக்கு விமானப்படை பதிலடி கொடுக்கும் விதமாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் இயங்கிக்கொண்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து…

ஐரோப்பா மிரட்டினால் ராக்கெட் வீச்சின் எல்லை அதிகரிக்கப்படும்: ஈரான்

லண்டன், ஈரான் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கெட் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது. இதனால் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் உள்ளன. இந்த நிலையில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் துணை தலைவரான சலாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள்…

பாகிஸ்தான்: ‘மத நிந்தனை’ கலவரத்தை தடுக்க ராணுவத்திற்கு அழைப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இஸ்லாமியவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுயத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்துள்ளது. முக்கிய நெடுஞ்சாலையை முடக்கி போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மூண்ட மோதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். பலர் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்,…

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும்…

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்? சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன் ஒத்துப்போவதில்லை? இந்த இரண்டுமே சக்திவாய்ந்த அண்டை நாடுகள் - பிராந்திய ஆதிக்கத்திற்காக இவையிரண்டும் கடுமையாக முட்டி…

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்: நடத்தியது யார்? நடந்தது எப்படி?

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்ட நிலையில், 'முழு பலத்தை' பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார். பிர் அல்-அபெட் நகரில் உள்ள அல்-ரவுடா…

ஜிம்பாப்வேயில் புதிய அதிபர் பதவி ஏற்றார்

ஹராரே, ஜிம்பாப்வே, 1980-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், கடந்த 37 ஆண்டுகளாக அந்த நாட்டில் ஆட்சி நடத்தி வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவரது அதிகாரத்தை கடந்த 15-ந் தேதி ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்களும், முகாபேவுக்கு…

எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 235 பேர்…

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்…

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவும் கியூபாவும் இணைந்தன

கியூபாவும் வடகொரியாவும் இணைந்து, ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.அமெரிக்காவின் “ஒருதலைப்பட்சமானதும் தன்னிச்சையானதுமான” கோரிக்கைகளை இரு நாடுகளும் நிராகரிக்கின்றன என, கியூப வெளிநாட்டு அமைச்சுத் தெரிவித்தது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில், இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர். தனது அணுவாயுதத் திட்டத்துக்காக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும்…

வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை சீனா துண்டித்தது

பீஜிங், வடகொரியாவும், தென் கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்றும் வட கொரியா மிரட்டி வருகிறது. எனவே, வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில்…

ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்

வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் இந்த…

லெபனான்: பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைத்தார் பிரதமர் ஹாரிரி

இரண்டரை வாரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் இருந்தபோது எதிர்பாராத விதமாக வெளியிட்ட பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக லெபனான் பிரதமர் சாட் ஹாரிரி தெரிவித்திருக்கிறார். இந்த நிலைமை பற்றி ஆலோசனை நடத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாக தெரிவித்த அதிபர் மிஷேல் ஓனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் ஹாரிரி இவ்வாறு…

பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை – வடகொரிய ராணுவத்தில் பெண்களின்…

உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய். பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றதாக ஈரான் அறிவிப்பு..!

ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசமாக்கிக்கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு அண்டை நாடான சிரியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றியுள்ள இந்த இயக்கம் மிக மோசமான தீவிரவாத அமைப்பாக கருத்டப்பட்டது. ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும்…

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற, விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆங்…

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்…