பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை? பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச்…
ஃப்ரெடி க்ரூகர் ஒரு கிளி. ஏப்ரல் 16ம் தேதி ஆயுதம் தாங்கிய திருடர்களால் கொண்டு செல்லப்பட்ட இது, 3 நாட்களுக்கு பின்னர் பிரேசிலின் தெற்கிலுள்ள காஸ்காவெல் விலங்கியல் பூங்காவுக்கு திரும்பி வந்தது மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக இது வாழ்ந்து வந்த கூட்டுக்கு அருகில் வந்தடைந்திருந்தது. இதனை திருடி…
செளதி அரேபியா: சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெண் மனித…
செளதி அரேபிய அரசு நான்கு பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது. கடந்தாண்டு 11 பெண் செயற்பாட்டாளர்கள் செளதியில் கைது செய்யப்பட்டனர். இந்த நான்கு பேர் உட்பட இதுவரை ஏழு பேர் கடந்த இரண்டு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஹதூன் அல் ஃபாஸி, அமல் அல்…
தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன்: பெண் மெய்காப்பாளரை மணந்து அரசியாக்கினார்
தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவரை திருமணம் செய்து கொண்ட தாய்லாந்து அரசர், அவருக்கு அரசிக்குரிய தகுதியை வழங்கியுள்ளதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அரசராவதற்கு மணிமுடி ஏற்கும் பெரியதொரு புனிதப்படுத்தும் சடங்குகள் சனிக்கிழமை நடக்க இருப்பதற்கு முன்னால் வியப்புக்குரிய இந்த அறிக்கை வந்துள்ளது. 66 வயதாகும் அரசர் மகா…
ஆதி மனிதன் வாழந்த இடம் இதுதான்
ஆதிமனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள், உயரமான இடங்களில் வசித்திருக்கலாமென கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திபெத்தின் உயரமான பகுதிகளில் அவர்கள் வசித்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டெனிசொவன்கள் ஆசியாவில் வாழ்ந்த ஒரு விசித்திரமான மனித இனம். இப்போதைய நவீன மனித இனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பு பல பத்தாயிரம்…
முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை தடை செய்த நாடுகள்…
ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது. ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை…
வெனிசுவேலா ‘ராணுவ கிளர்ச்சியை’ முறியடித்ததாக அறிவித்த அதிபர் மதுரோ
வெனிசுவேலாவில், எதிர்கட்சி தலைவர் குவான் குவைடோவால் நடத்தப்பட்ட ராணுவ கிளர்ச்சியை தாம் முறியடித்துவிட்டதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். செவ்வாயன்று 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வன்முறையில், டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் எதிர்கட்சியின் பக்கம் இருந்தனர். ஆனால் தொலைக்காட்சி உரை ஒன்றில், அதிபர் மதுரோ தனக்கு எதிராக ராணுவத்தை…
மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா: ஆட்சேபனையை விலக்கிக்கொண்ட சீனா
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக கருதப்படுகிறது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள்…
வெனிசுவேலா நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தாரா அதிபர் மதுரோ?
நாட்டைவிட்டு வெளியேற வெனிசுவேலா அதிபர் மதுரோ எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் கூறியதாகவும், ஆனால் பின்னர் அவர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்துவரும் நிலையில் அதிபர் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.…
ஐ. எஸ் ஐ. எஸ் இன் அடுத்த இலக்கு எந்த…
அடுத்து எந்த நாட்டில் தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதை, பெங்காலி மொழியில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டியின் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சூசமாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றாலும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பானது, கடந்த 21-ம் திகதியன்று இலங்கையில் நடத்திய கொடூரமான தாக்குதலில் 253 அப்பாவி…
பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து பாகிஸ்தான்; பாராளுமன்றத்தில்…
சிறுமியர்களை பலவந்தப்படுத்தி திருமணம் செய்யும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. பாகிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் 12, 13 வயதான சிறுமிகளை பெற்றோர்கள் பலவந்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் பழக்கவழக்கம் நடைமுறையில் உள்ளது. இதை…
ஜகர்தாவில் இருக்கும் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இந்தோனேசியா…
இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் தீர்மானித்துள்ளார். சுமார் 26 கோடி மக்கள் வாழும் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அருகாமையில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார்…
ரஷ்யாவுக்கு உளவு பார்த்த ‘திமிங்கிலம்’ – ஆர்க்டிக் கடலோரம் கண்டுபிடித்த…
நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நார்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில்…
‘பாகூஸ் இழப்புக்கு பழி தீர்க்கவே இலங்கையைத் தாக்கினோம்’: ஐ.எஸ் தலைவர்…
சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18…
அமெரிக்க யூத வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள யூத வழிப்பாட்டு தளத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் பெண் ஒருவர் பலியானார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த தாக்குதல் ஈடுப்பட்ட 19 வயது நபர் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்று போலீஸார் கூறாத…
விமான உற்பத்தி துறையில் களமிறங்கிய சீனா – போயிங், ஏர்பஸ்ஸை…
விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின் கோமாக் (கம்மர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப்…
இந்தோனீசியாவில் தேர்தல் பணிச்சுமையால் உயிரிழந்த 272 ஊழியர்கள்
இந்தோனீசியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பணியாற்றியதால் உண்டான பணிச்சுமையால் 272 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலானவர்களின் உயிரிழப்புக்கான காரணம் அயர்ச்சியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது 1,878 ஊழியர்கள் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக இந்தோனீசியாவின் பொது தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரீப்…
இலங்கை குண்டுவெடிப்பு: தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க முயல்கிறதா ஐ.எஸ்…
இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் தேதி தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது உள்ளூரில் செயல்படும் தேசிய…
பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை!
குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு…
துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி… பிரசவம் பார்த்து காப்பாற்றிய…
துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு…
அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் மீட்பு!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற புகழ்பெற்ற நூலகம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த புத்தகங்களுடன், பழங்கால அரிய பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில்…
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சோதனை வெற்றி!
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தி, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த…
வடகொரியாவும், ரஷியாவும் உறவை பலப்படுத்த உறுதி – கிம், புதின்…
முதல் முறையாக சந்தித்து பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி பூண்டனர். பனிப்போர் காலத்தில் ரஷியாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்டு கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவம் மற்றும் வணிக ரீதியில் இந்த…
வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் – நார்வே…
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார். லண்டன், பிரான்ஸ், நார்வே ஆகியவற்றில் இருந்து ஐஎஸ் அமைப்பில் இணைய பலர் சிரியாவிற்கு சென்றனர். சமீபத்தில் அமெரிக்கப்படையிடம் சில ஐஎஸ் பயங்கரவாதிகள் சிக்கினர். இதையடுத்து…