இரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான அமெரிக்கத் தடை…

இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின்…

ரஷ்ய அதிபர் புதின் – கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை:…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகாக ரஷ்யா சென்றுள்ளார். கிம் தனது தனியார் ரயிலில் பயணம் செய்வதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷிய அதிபருடனான கிம்மின் முதல் சந்திப்பு இதுவாகும். பசிபிக் கடற்கரை நகரான விலாடிஓஸ்டாக்கில் வியாழனன்று சந்தித்து, கொரிய தீபகற்பத்தின்…

தென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலூ-நட்டால் மாகாண பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவுகளாலும் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இந்த பிரதேசத்திற்க்கு அதிபர் சிரில் ராமபோசா விமானம் மூலம் சென்றுள்ளார். கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால், தென்னாப்பிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மிக…

கோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர். முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்த சமயத்தில், அவர் பயணம் செய்த கார் பேருந்து ஒன்றின்…

வைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன அதிகாரிகளும்

மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த…

பிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில நடுக்கம்

பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசானில் நிகழ்ந்த பலத்த நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆகியுள்ளது. 6.1 அளவு இருந்த நிலநடுக்கம் நிகழ்ந்த 24 மணிநேரத்திற்குள் 6.4 அளவுள்ள இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மத்திய விசாயாஸ் பிரதேசத்தின் தெற்கு பகுதியை தாக்கியுள்ளது. 6.1 அளவிலான முதல் நிலநடுக்கம் அந்நாட்டு…

ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி!

ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானார்கள். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ்.…

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல பிரித்தானிய கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் அவரது மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.…

உக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்

உக்ரைன் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலுக்கு புதியவரான ஜெல்லன்ஸ்கி, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு வாக்குகளை பெற்றிருந்தார். 41 வயதான…

இலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல…

கொழும்பு: இலங்கையில் என்று அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில், வெளிநாட்டவர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஈஸ்டர் திருநாளான இன்று, கொழும்பு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில், தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருக்கக் கூடிய நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து…

வியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா

வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான 'ஆரஞ்ச்' எனப்படும் ரசாயணத்தை அந்நாடு சேமித்து வைத்திருந்தது. வியட்நாம் போர் முடிந்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இந்த பத்தாண்டு திட்டத்தை 183 மில்லியன் டாலர்கள்…

அபுதாபியில் முதல் இந்து கோவில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல்…

ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார்.…

ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில்…

போர்ச்சுகலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலா தலமான இங்கு அயல்நாடுகளில் இருந்து…

சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி!

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது…

நாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும் நெருக்கடி!

மாலி நாட்டில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி…

பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்!

பாகிஸ்தானில் 17 வயதுடைய இந்து பெண் கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து லாகூரில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் சிந்து மாகாணம் கோத்கி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை…

வீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6 பேர் பலியான சோகம்!

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், 2 பெண்கள் உள்பட 5 பயணிகளும் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சில…

வெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; பெரும் அதிர்ச்சியில்…

பெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.…

பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், ராணுவ…

புதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட கொரியா மற்றும் பிற…

புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாகவும்…

இந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்?

இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர்…

மியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு

பத்திரிகை உலகின் மிகவும் உயரிய ‘புலிட்ஸர் பரிசு’க்கு மியான்மர் உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்கள் தேர்வாகியுள்ளனர். மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில்…

ஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில்…

சூடானின் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் கடும் கண்காணிப்பில் அதிபருக்கான வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாயின. அவர்…