பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆப்கானிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதல்: 11 பேர் பலி
காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே உள்ள பனாயி என்ற பகுதியில் தனியார் கட்டிடத்தில் இரவு நேரத்தில் புகுந்த தற்கொலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் உட்பட 11 பேர் உடல்சிதறி பலியாகினர். 25 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும்…
பெரு பஸ் விபத்தில் 48 பேர் பலி
பெருவின் கடற்கரையோர மலையுச்சியிலிருந்து பஸ்ஸொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர். ட்ரக் ஒன்றுடன் மோதிய பின்னரே, பஸ் கீழே விழுந்து, விபத்துக்குள்ளானது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைநகரிலிருந்து 130 கிலோமீற்றர்கள் வடக்காக உள்ள ஹுவாச்சோ என்ற இடத்திலிருந்து, தலைநகருக்கு, 55 பயணிகளுடனும் 2 பணியாளர்களுடனும், அந்த…
அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி
இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்த அமைதியற்ற நிலையை எதிர்கொள்வதற்காக அரசுக்கு ஆதரவான பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து…
பாலத்தீனத்திற்கான உதவிகள் நிறுத்தப்படலாம்: டிரம்ப் அச்சுறுத்தல்
அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டாத பாலத்தீனத்திற்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் நிறுத்தப்படலாம் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் கணக்கில் பாகிஸ்தானை மேற்கோள் காட்டி டிரம்ப், "பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கு எந்த பலனும் இல்லாமல் நாம் பல பில்லியன் டாலர்கள் அளித்து…
இரான்: போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
இரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று இரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தப்போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22-ஐ எட்டியுள்ளது. காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கிகளை கைப்பற்ற முயன்ற போது ஆறு போராட்டக்காரர்கள் இறந்துள்ளனர். பதினோரு…
போராட்டத்தில் 10 பேர் பலி: இரான் தலைவர்களை விமர்சித்த டிரம்ப்
இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "பல்வேறு நகரங்களில் நேற்றிரவு நடைபெற்ற போராட்டங்களில், துரதிஷ்டவசமாக சுமார் 10 பேர் உயிரிழந்ததாக" செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை, போராட்டம் தொடங்கியதில் இருந்து குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த…
எங்களிடம் உதவி வாங்கிக்கொண்டு எங்களையே ஏமாற்றுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்
சமீப ஆண்டுகளில், அமெரிக்காவிடம் இருந்து பல பில்லியன் டாலர் பணத்தை உதவியாகப் பெற்றபோதிலும், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பொய் கூறுவதாகவும், ஏமாற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட அமெரிக்க படைகளால் தேடப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம்…
இரான்: வன்முறையாக மாறிய மூன்றாவது நாள் போராட்டம்
இரானில் சில நகரங்களில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறையாக மாறி வருவதைக் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. இரானில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், "சட்டவிரோதக் கூட்டங்களை" தவிர்க்க வேண்டும் என இரான் உள்துறை அமைச்சர் எச்சரித்ததையும்…
வட கொரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற 2-ஆவது கப்பல் பறிமுதல்
சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் விவகாரத்தில் இரண்டாவது கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனாமாவிலிருந்து புறப்பட்ட கோட்டி என்ற இந்த கப்பலானது பியாங்டெக்கின் மேற்கு பகுதியிலுள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ரகசியமாக…
2017 – ஆண்டு உலகளவில் நடந்த முக்கிய விடயங்கள், ஒரு…
சர்வதேச நாட்டாமை: அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுக்கட்சியை சேர்ந்த டிரம்ப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பதவியேற்றது முதலே சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் டிரம்ப் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளார். அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு,…
தாய்லாந்து: பண மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை
பண மோசடியில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான புடிட் கிட்டித்ரடிலோக், தன் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக அதிகளவிலான லாபம் திருப்பி அளிக்கப்படும் எனக்கூறி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். புடிட்டின் அறிவுறுத்தலின்படி, சுமார் 40,000 பேர்…
எகிப்து நாட்டில் தேவாலயம் மீது பயங்கரவாத தாக்குதல்: 10 பேர்…
கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ள ஹெல்வான் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாயிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் பயங்கரவாதியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் பயங்கரவாதி தனது கையில் …
சீனா – வடகொரியா இடையே சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றம்: டிரம்ப்…
வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை தமக்கு "மிகுந்த வருத்தமளிப்பதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை வெளிவந்ததையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், இதில் சீனா "கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார். பியாங்யாங்கிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுமானால்,…
ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ..
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. ஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சைக்காலஜி…
ஆப்கானிஸ்தான்: தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். அதே பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு…
பருவநிலை அகதிகள்: சிரியா கிளர்ச்சிக்கும் வெப்பநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பு
ஐரோப்பாவில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கும், உலகெங்கும் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஓர் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள 103 நாடுகளில் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை 20 டிகிரியிலிருந்து மாறுபடும்போது, அந்த நாடுகளை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேறு…
பேனசீர் படுகொலையை பாகிஸ்தான் மறைத்தது எப்படி? 10 ஆண்டுகளாக புதைந்து…
ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய முதல் பெண்மணி பேனசீர் பூட்டோ. இவர் கொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறதே தவிர, இவரது கொலைக்கு உத்தரவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலால் எனப்படும் 15 வயதான தற்கொலை குண்டுதாரியால், டிசம்பர் 27-ம் தேதி 2007-ம் ஆண்டு பூட்டோ கொல்லப்பட்டார்.…
வேட்டையாடப்படும் கலைமான்களை காக்க புதிய செயலி
ஓநாய்கள், காட்டுபூனை வகை மிருகங்கள் ஆகியவற்றால், கலைமான்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, அவைகளுக்கான பாதுகாப்பு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் அடர்ந்த வனங்களில், மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு, விலங்குகள் எங்குள்ளன என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சியை இவை சுலபமாக்குகின்றன. பெண் கலைமான்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள சென்சார்கள் சமிஞ்கைகள், மேய்ச்சல்காரர்களின் கைபேசியோடு இணைக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள…
நிலத்திலும் நீரிலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானம்
உலகிலேயே மிகப்பெரிய, `தரையிலும், நீரிலும் தரையிறங்கும்` விமானமான ஏ.ஜி 600 என்ற விமானத்தை சீனா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமானம், தனது முதல் ஒரு மணி நேர பயணத்தை செய்துள்ளது. கிட்டத்தட்ட போயிங் 747 வகை விமானத்தைபோலவே அளவுள்ள இந்த விமானம், நான்கு டர்போபாப் எஞ்சின்களை கொண்டது. இது,…
“தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்”
சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தகவலை…
ஜெருசலேம் பிரச்சனைக்கு போப் பிரான்சிஸ் சொல்லும் தீர்வு என்ன?
போப் பிரான்சிஸ், தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் தின செய்தியில், "ஜெருசலேத்திற்கு அமைதி வேண்டும்" என்று கூறியதோடு, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே "அதிகரித்துவரும் பதட்டத்தை" குறிப்பிட்ட அவர், "அமைதியான முறையில் இருநாடுகளும் சேர்ந்திருக்க வித்திடும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம்…
ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்காவின் அமைதி திட்டத்தை நிராகரித்த பாலத்தீன அதிபர்
ஜெருசலேம் சர்ச்சைக்கு பிறகு, இஸ்ரேலுடன் சமாதானமாக செல்ல அமெரிக்கா வரையறுக்கும் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.…
கேட்டலன் தேர்தல்: ஸ்பெயின் தோற்றுவிட்டதாக அறிவித்த பூஜ்டிமோன்
கேட்டலன் பிராந்தியத்திற்கான நாடாளுமன்ற தேர்தலில், ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அப்பிராந்தியத்தின் தலைவர்பூஜ்டிமோன் அறிவித்துள்ளார். தற்போது பிரஸ்ஸல்ஸில் தஞ்சமடைந்துள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான பூஜ்டிமோன், இந்த முடிவு "கேட்டலன் குடியரசு" வென்றுவிட்டதை குறிப்பதாக பாராட்டினார். புதிய சட்டமன்றத்தில் பிரிவினைவாத கட்சிகள் மெல்லிய மற்றும் குறைந்த பெரும்பான்மையை கொண்டிருக்கும். இருப்பினும்,…






















