யார் மக்களின் குரல்: குலாவா ? வேதாவா?

kulasegaranமுதன் முறையாக நாடாளு மன்றதிற்கு 1997 இல் தேர்ந்தெடுக்கப் பட்ட போது குலசேகரன்  இந்திய சமூகத்திற்காக குரல் கொடுத்தது தென் இந்தியத் தொழிளாளர் சேம நிதிக்காகத்தான்.

20 மில்லியன் ரிங்கிட்டையும் இந்திய சமூகத்தின் சொத்தான 14  ஏக்கர் நிலத்தையும்  அரசாங்கத்தால்  கையகப்படுத்த  முற்பட்ட போது அதனை வன்மையாகக் கண்டித்து போராடியவர் குலா. அதற்குப் பதிலாக வருடத்திற்கு 500 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம் இந்தியர் நலனுக்காக ஒதுக்க வேண்டுமென்றும் போராடினார். இவை இரண்டையுமே பாரிசான் அரசு அப்பொழுது நிகாரித்தது.இருந்த போதும் இவரின் தொடர் போராட்டத்தினால் கிடைக்கப் பெற்ற வெற்றிதான் அந்த 14 ஏக்கர் நிலத்தில் இன்று அமைந்திருக்கும் ஆறுமுகம்  பிள்ளை தொழில் திறன் கல்லூரி.

அது மட்டுமின்றி அக்கல்லூரியில் அதிகமான இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்ற  போராட்டதிலும்  அவர் வெற்றி கண்டார்.

இன்னொரு தகவலும் இந்த நேரத்தில் நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். 1997 இல் தெலுக் இந்தான்  நாடாளுமன்ற இடைதேர்தலில் அவர் வெற்றி பெற்ற போது பாரிசன் நேசனலின் பங்காளிக் கட்சி ஒன்று அவரை அழைத்து அக்கட்சியில் இணைந்தால் துணை அமைச்சர் பதவி வழங்கப்படுமென்றும் வாக்குறுதி கொடுத்தனர். அதைப் பெருமனதோடு தனது கொள்கையின் காரணாமாகவும் வாக்களார்களுக்கு துரோகம் செய்யாமல் இருப்பதற்காகவும் அந்த அழைப்பை நிராகரித்தார்.

2005 இல் அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் ரஷ்யாவிலுள்ள கிரிமியா மருத்துவ பல்கலைக்  கழகத்தின்  அங்கீகாரம் மீட்டுக் கொள்ளப்பட்டபோது அதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவரும் இந்த குலாதான்.

அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் பயிலுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதன் அங்கீகாரத்தை பாரிசான் அரசு ரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, பிரதமர் துறை அமைச்சரான நஸ்ரி ” குலா ஓர் இன வெறியன்” என்ற சுடுச் சொல்லை 30 க்கு மேற்பட்ட தடவைகள் அவர் மேல் பாய்ச்சினார்.

najibஅதையும் சமூகத்திற்காக தாங்கிக் கொண்டவர்தான் இந்த குலா. பேரா மாநிலத்தில் ஈப்போ கல்லு மலை கோயிலின் கோபுர உயரம் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று பாரிசான் ஆட்சியில் தடை செய்யப் பட்டிருந்தது. அந்தத் தடையை 2008ல் ஆட்சிக்கு வந்த   பாக்காத்தான் அரசு நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் கேட்ட உயரத்துக்கு கோபுரத்தைக் எழுப்ப அனுமதி கொடுத்தது. இதற்குப் போராடியவர்கள் குலசேகரனும்,  அன்றைய ஆட்சிக் குழுவில் இருந்த சிவநேசன் ஆவர்!.

பதவி பட்டம் புகழ் என்ற வெளிப்புற ஆசைகளுக்கு குலசேகரன் ஆசைப்பட்டிருந்தால் தன் தந்தை ம.இ.காவில் முக்கிய பொறுப்பில் இருந்த போதே அதைத் தனக்கு சாதகமாக பயன் படுத்தி எப்போதோ ம.இ.காவிலோ பாரிசான் உறுப்புக் கட்சிகள் ஒன்றினிலோ தன்னை இணைத்துக் கொண்டு அச்சுகங்களை இலகுவாகப் பெற்றிருக்கமுடியும்.

அக்காலக்கட்டத்தில் இந்தியர்கள் ம.இ.காவை தவிற பிற கட்சிகளில் இணைய தயக்கமும் பயமும் கொண்டிருந்த பொழுது சமூகத்திற்காக போராட வேண்டி ஜனநாயகச் செயல் கட்சி யில்  இணைந்து  தைரியாமாக  தன்னுடைய  போராட்டங்களை இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகின்றார் இந்த குலசேகரன்.

ம.இ.கா ஹோல்டிங்ஸில் பணம் போட்டவர்களுக்ககாக கடந்த 15  வருடங்களாக போராடி அதற்காக ஒரு கட்டத்தில்,ம.இ.காவின் குண்டர்களால் தாக்கப்பட்டார் என்பதுவும் அவர் போராட்டதில் ஓர் அத்தியாயமாக விளங்குகின்றது.

100 நாட்களில் ஒன்றுமே செய்யாமல் அதை வெளிப்படையாக பறை சாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதுவே ஹிண்ராப்பின் பெரிய சாதனை என்று பீற்றிக் கொள்ளும் வேதமூர்த்தியின் ஆதரவாளர்களுக்கு குலாவின் போராட்டம் கண்களுக்கு தெரியாதது ,தீப்பறவை மண்ணுக்குள் தலையை விட்ட கதை போல் இருக்கிறது.

ஆராம்பத்தில் எல்லா ஹின்ட்ராப் போராட்டங்களில் நான் கலந்து கொண்டு வந்துள்ளேன். அதற்கான காரணம் அதன் உன்னத நோக்கங்கள் என்ணக் கவர்ந்ததுதான். வேதமூர்த்தி எப்பொழுது சமூகத்தை விற்று தன் சுய லாபத்திற்காக புரிந்துணர்வு அம்சத்தில் கையெழுத்திட்டாரோ அன்றே அந்த இயக்கம் இந்தியர் நலம் பேணும் இயக்கமல்ல என்பதை உணர்ந்து என்னை விளக்கிக்  கொண்டேன்.

ஆகவே, இன்று  ஹின்ட்ராப்பும் வேதமூர்த்தியும் பாரிசான் அரசு இந்தியர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றிவிட்டது என்று பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்..  அப்போதுதான் அவர்களுக்கு விமோசனம் உண்டு.

க.எலன் – ஜனநாயக செயல் கட்சி ஸ்ரீ தாமான் கிளை தலைவர்.

TAGS: