தமிழ் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த நடவடிக்கை!- தேசிய சுதந்திர முன்னணி

nff_muzammilதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பிரிவினைவாத அரசியல் நோக்கத்தை வலுப்படுத்தும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், இந்த கருத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரச்சினை உள்ளதாக இன்று தென்னிலங்கைக்கு காட்டப்படுகிறது.

எனினும் இது பிரிவினைவாதத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியே என்று முஸம்மில் குறிப்பிட்டார்.

தனித்தனியாக ஒவ்வொருவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்ற போதும் அனைவரினதும் நோக்கம் ஒன்றாகவே அமைந்துள்ளது என்றும் முஸம்மில் தெரிவித்தார்.

TAGS: